ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்.. எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி.. கிழித்து தொங்கவிடும் அதிமுக முன்னாள் எம்.பி.!

Published : Jul 11, 2021, 03:13 PM IST
ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்.. எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி.. கிழித்து தொங்கவிடும் அதிமுக முன்னாள் எம்.பி.!

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமி தற்போது கட்சியை மறந்துவிட்டு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறார். யாரை வேண்டுமானாலும் கட்சியில் இருந்து நீக்கலாம் என்ற மனநிலையில் இருக்கிறார். அவருக்கு பின்னால் தங்கமணி, வேலுமணி ஆகியேர் அதிமுகவை ஆட்டி படைக்கின்றனர். 

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக தலைமை சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது என நாமக்கல் அதிமுக முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம்  குற்றம்சாட்டியுள்ளார். 

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் 900க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தோப்பு வெங்கடாசலம், ஈரோடு மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம் என்றார். இதேபோல், நாமக்கல் கிழக்கு மாவட்டம், அதிமுகவைச்  சேர்ந்த அவைத்தலைவரும் - சட்டமன்றக்குழு முன்னாள் தலைவருமான பி.ஆர்.சுந்தரம், Ex.M.P., & Ex.M.L.A.,  அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.ஆர்.சுந்தரம்;- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ரப்பர் ஸ்டாம்ப். அவர் எதையும் செய்ய முடியாத சூழலில் இருக்கிறார். அவருக்கு துணை முதல்வர் பதவி வந்தால் போதும். தன்னுடைய மகனுக்கு மத்தியில் அமைச்சர் பதவி கிடைத்தால் போதும் என்று இருந்து வருகிறார். 

எடப்பாடி பழனிசாமி தற்போது கட்சியை மறந்துவிட்டு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறார். யாரை வேண்டுமானாலும் கட்சியில் இருந்து நீக்கலாம் என்ற மனநிலையில் இருக்கிறார். அவருக்கு பின்னால் தங்கமணி, வேலுமணி ஆகியேர் அதிமுகவை ஆட்டி படைக்கின்றனர். அதிமுகவில் உழைப்பவர்களுக்கும், விஸ்வாசிகளுக்கும் மரியாதை இல்லை. அதிமுக ஒரு ஜாதி கட்சியாக மாறிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!