கவலைப்படாதீங்க.. அந்த கனவு மட்டும் ஒருபோதும் நிறைவேறாது.. கனிமொழியின் சரவெடி பதில்..!

Published : Jul 11, 2021, 02:00 PM IST
கவலைப்படாதீங்க.. அந்த கனவு மட்டும் ஒருபோதும் நிறைவேறாது.. கனிமொழியின் சரவெடி பதில்..!

சுருக்கம்

தமிழ் மண்ணின் பெருமைகளை எந்த காலகட்டத்திலும் இந்த ஆட்சி விட்டுக் கொடுக்காது. நம்முடைய பெருமை மற்றும் உரிமைகளுக்காக திமுக ஆட்சி தொடர்ந்து போராடும். தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது. அந்தக் கனவு எல்லாம் நிறைவேறாது. ஆகையால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார். 

அரசியல் சட்டத்தில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், ஒன்றிய அரசு என்று கூறுவது தவறும் இல்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 311-வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு திமுக எம்.பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி;- இந்த மண் மற்றும் மண்ணின் பெருமைகளை பாதுகாப்பதற்காக தன் இன்னுயிரைத் தந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து காப்பாற்றும். 

தமிழ் மண்ணின் பெருமைகளை எந்த காலகட்டத்திலும் இந்த ஆட்சி விட்டுக் கொடுக்காது. நம்முடைய பெருமை மற்றும் உரிமைகளுக்காக திமுக ஆட்சி தொடர்ந்து போராடும். தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது. அந்தக் கனவு எல்லாம் நிறைவேறாது. ஆகையால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார். 

மேலும், அரசியல் சட்டத்தில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், ஒன்றிய அரசு என்று கூறுவது தவறும் இல்லை, ‌நாட்டுக்கு எதிரான ஒன்றுமில்லை. தமிழகம் பாதுகாப்பான ஆட்சியின் கீழ் இன்று இருக்கிறது. ஆகையால் தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என கனிமொழி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!