அதிமுக வளர்ச்சிக்கு இவர் தடையாக இருக்கிறார்... முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் சாடல்!!

By Narendran S  |  First Published Mar 29, 2023, 7:46 PM IST

ஜெயலலிதா மறைவிற்கு பின்பு அதிமுகவை வழி நடத்தி செல்லும் ஆற்றல் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். 


ஜெயலலிதா மறைவிற்கு பின்பு அதிமுகவை வழி நடத்தி செல்லும் ஆற்றல் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின் மூன்றாவது அத்தியாயமாக எடப்பாடி உள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் முதலமைச்சராக நான்கு ஆண்டு காலம் பதிவ வகித்தார். அதன் பிறகு நடைபெற்ற தேர்தல் மூலம் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பின்பு இனிமேல் அதிமுக அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.

இதையும் படிங்க: மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

Latest Videos

காலத்தை உணர்ந்து தான் சூழ்நிலைகள் நகரும் சூழ்நிலையை அறிந்ததால் தான் தற்போது பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நூறாண்டு காலம் அதிமுகவையும் அதன் கொள்கையும் கொண்டு செல்வதற்கு தான் ஜெயலலிதா ஆசைப்பட்டார். அதற்கு பொதுச் செயலாளர் என்ற பதவி தேவைப்படுகிறது. அதிமுகவின் வளர்ச்சிக்கு ஓபிஎஸ் தடையாகவே இருந்து வருகிறார். எத்தகைய மேல்முறையீடு ஓபிஎஸ் செய்தாலும் எடப்பாடியார் பக்கம் தொண்டர்களும் நிர்வாகிகளும் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சவால்களை எதிர்கொண்டு இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி பெருமிதம்!!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவிற்கு பின்பு அதிமுகவை வழி நடத்திச் செல்வது யார் என்பது அறிந்து தான் தொண்டர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். ஆகவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆற்றல் இருக்கிறது, ஆதரவு இருக்கிறது. தனது மகனுக்கு சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு ஆசைப்படாமல் எப்பொழுதும் சுயநலத்திற்காக செயல்படாதவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த வெற்றியை நிரந்தர வெற்றியாக மாற்றுவதற்குரிய சூத்திரம், யூகம் எடப்பாடிக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார். 

click me!