எண்ணூரில் ஓபிஎஸ் - எண்ணெய் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார்

Asianet News Tamil  
Published : Feb 05, 2017, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
எண்ணூரில் ஓபிஎஸ் - எண்ணெய் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார்

சுருக்கம்

கடலில் எண்ணெய் கலந்ததை அகற்றும் பணியை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எண்ணூர் அருகே பார்வையிட்டார். எர்ணாவூர் அருகே இந்த பணியை பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் ஜெயகுமார் , கருப்பண்ணன் , பெஞ்சமின் , தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சருக்கு எண்ணெய் அகற்றும் பணி குறித்து கடலோர காவல்படை உயர் அதிகாரிகள் விளக்கி கூறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஓபிஎஸ் கூறியதாவது.:

எதிர்பாராத விதமாக சென்னை துறைமுகத்தில் இரு கப்பல்கள் உரசிகொண்டதில் ஒரு கப்பலில் இருந்து துவாரம் வழியாக கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. 

அதை எடுக்கும் பணியை கடந்த 30 ஆம் தேதி முதல்  5700 பேர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் , சென்னை மாநகராட்சி ,ஐஓசி மணலி ,எச்டிசி அத்திபட்டு , தன்னார்வலர்கள் ,எல்.அன்.டி , இந்திய கடலோர காவல்படை . தேசிய கப்பற்படை, டிபிசிஎல் , அதானி குழுமம்  என   25 குழுக்கள் 5 நாட்களாக பணியாற்றி வருகின்றனர்.

அத்தனை கச்சா எண்ணெயையும் எடுக்கின்ற பணி விரைவில்  முடிந்துவிடும், காஞ்சிபுர கடற்பகுதியில்  95%  கச்சா எண்ணெய் அகற்றப்பட்டுவிட்டது , சென்னை 98% சதவிகிதம் அகற்றப்பட்டுவிட்டது , இங்கே திருவள்ளூர் மாவட்டத்தில் தான் மீதமுள்ள பணி நடந்து வருகிறது. 

தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை குழுவும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தன்னார்வ தொண்டர்கள் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

சேதங்கள் மதிப்பிடப்பட்டு அரசின் கவனத்தில் எடுக்கப்படும். விசாரணை நடந்து வருகிறது முடிந்தவுடன் அறிவிக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தார்

PREV
click me!

Recommended Stories

ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!
ஈரானுடன் போருக்கு தயாரான அமெரிக்கா..! வண்டவாளம் ஏறப்போகும் வல்லரசின் பெருமை..! பீதியில் ட்ரம்பின் ராணுவம்..!