துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி

Asianet News Tamil  
Published : Feb 05, 2017, 10:31 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி

சுருக்கம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் திடீர் நெஞ்சு வலி காரணமாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கே.வி. குப்பம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன். திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

திமுகவின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான துரைமுருகன் பல ஆண்டுகளாக காட்பாடி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவருகிறார்.

இந்நிலையில் திடீர் நெஞ்சு வலி காரணமாக துரைமுருகன் மருத்துவமனயில் அனுமதிக்கபட்டிருப்பது திமுக வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று கடந்த நவம்பர் மாதம் திடீர் உடலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக திமுக வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Women Free Bus Travel: பெண்களுக்கு இலவச பயணம்.! எந்த பேருந்துகளில் கட்டணம் கிடையாது?
Free 3 LPG Cylinders Per Year: விலையில்லாமல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்.! யாருக்கு கிடைக்கும் தெரியுமா?