கொடநாடு கொலை சம்பவத்தின் போது மின் இணைப்பை துண்டிக்க சொன்னது யார்..? கேள்வி எழுப்பும் ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Aug 1, 2023, 2:01 PM IST

கொடநாடு கொலை வழக்கில் சம்பவம் நடந்த இரவு யார் மின் இணைப்பை துண்டித்தார்கள்? துண்டிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது யார்? என ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். 


ஓபிஎஸ்- டிடிவி போராட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ள சம்பவம் நடைபெற்றது. இதில் முக்கிய குற்றவாளியை விரைவில் கண்டுபடித்து தண்டனை கொடுப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்திருந்தார். இந்தநிலையில் 2 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்காத திமுக அரசு கண்டித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போராட்டம் அறிவித்தார். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வத்தோடு இணைந்து தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.  

Tap to resize

Latest Videos

கொடநாடு குற்றவாளி யார்.?

அப்போது  பேசிய ஓ.பன்னீர் செல்வம், தமிழகம் முழுவதும் நமது எண்ணங்களை, புரட்சிகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை செய்த குற்றவாளிகளையும், அதன் பின்னால் இருப்பவர்களையும் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இல்லை என்றால் மக்கள் போராட்டமாக வெடிக்கும் என தெரிவித்தார். திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக கொடநாடு குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வாங்கி கொடுப்போம் என தெரிவித்தார்கள். ஆனால் 30 மாதங்கள் ஆன நிலையில் குற்றவாளிகளை கண்டு பிடிக்காமல் ஆமை வேகத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

மின்சாரத்தை துண்டிக்க சொன்னது யார்.?

கோடாநாடு கொலை  சம்பவம் நடந்த இரவு யார் மின் இணைப்பை துண்டித்தார்கள்? துண்டிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது யார்?". என கேள்வி எழுப்பியவர், உண்மையான குற்றவாளிகள் விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்தார்.  இதனை தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், நாங்கள் இருவரும் இணைந்தது சுயநலத்திற்காக அல்ல, முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக ஒன்றினையவில்லை. துரோகிகள் கையில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்கவே ஒன்றிணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

சந்தில் சிந்துபாடி, சிந்துபாத் வேலை பார்ப்பவர்கள்; அச்சாணியை பற்றி பேசுகிறார்கள்... சீறும் டிடிவி தினகரன்

click me!