எடப்பாடி பழனிச்சாமி ஜாதி சமுதாயத்திற்கு அப்பர்பட்டவர். பொதுக்குழு நடைபெறுவதற்கு முன்பு நாங்கள் எடப்படியை பொதுச் செயலாளராக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது போது எடப்பாடி தான் ஓபிஎஸ் ஒரு பதவி கொடுக்க வேண்டும் அவரிடத்தில் சென்ற பேசுங்கள் என்று கூறினார்.
திமுக பின்னணியில் இருந்தால் தான் வழக்குகளில் இருந்து நாம் தப்பிக்கு முடியும் என்று திமுக பி டீமாக செயல்படுகிறார் ஓபிஎஸ் என முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சித்தார்.
மதுரை மாவட்டத்தில் வருகிற 20ம் தேதி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்;- ஒபிஎஸ் தொல்லை தாங்கமுடியவில்லை நீதிமன்றம் என எங்கு சென்றாலும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை என ஓபிஎஸ்சை விமர்சித்தார். இங்கு வந்து இருக்க கூடிய கூட்டத்தை பார்த்தால் தேனியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி நடத்தும் கூட்டம் ரத்து செய்யப்பட்டால் கூட ஆச்சிரியபடுவதற்கு ஒன்றும் இல்லை. நாளை தேர்தல் வைத்தாலும் எடப்பாடி தான் முதல்வராக வருவார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று எந்த நேரத்தில் முதலமைச்சர் பதவி ஏற்றாரோ எல்லாம் விலைவாசி உயர்வு ஏறிவிட்டது மக்கள் வீட்டில் தக்காளி சட்டினி கூட வைக்க முடியாது சூழல் ஏற்பட்டது
செல்லூர் ராஜூ
இது தேனி மாவட்டம் இல்லை புரட்சித்தலைவி அம்மா மாவட்டம் என்று தான் கூற வேண்டும். அதிமுகவின் ஒரே எதிரி கருணாநிதி குடும்பம் தான் திமுக மட்டும் தான் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வணங்க வேண்டிய மாவட்டம் தேனி மாவட்டம் என்று கூறிய அவர் இந்த இயக்கத்தை அழிக்க யாராலும் முடியாது அது துரோகியாக இருந்தாலும் சரி எதிரியாக இருந்தாலும் சரி என்றும் ஆகஸ்ட் 20 தேதி நடைபெற உள்ள இந்த பொன்விழா மாநாடு தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொடுக்க போகிறது என்று கூறினார்
எஸ்.பி. வேலுமணி
எடப்பாடி பழனிச்சாமி ஜாதி சமுதாயத்திற்கு அப்பர்பட்டவர். பொதுக்குழு நடைபெறுவதற்கு முன்பு நாங்கள் எடப்படியை பொதுச் செயலாளராக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது போது எடப்பாடி தான் ஓபிஎஸ் ஒரு பதவி கொடுக்க வேண்டும் அவரிடத்தில் சென்ற பேசுங்கள் என்று கூறினார். ஸ்டாலின் கருணாநிதி குடும்பத்தை எதிர்த்து வளர்ந்த கட்சி. ஆனால் உங்கள் மகன் ஸ்டாலினை கோட்டையில் சென்று சந்திக்கிறார். நீங்கள் கருணாநிதி புத்தகத்தை படி என்று கூறுகிறார்கள். வரக்கூடிய 40 தொகுதிகளிலும் எடப்பாடி தலைமையில் வெல்லுவோம்.
தங்கமணி
திமுக பின்னணியில் இருந்தால் தான் வழக்குகளில் இருந்து நாம் தப்பிக்கு முடியும் என்று திமுக பி டீமாக செயல்படுகிறார் ஓபிஎஸ். கொடநாடு கொலை குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தார் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஜாமின் பெற்று தந்தவர்கள் திமுக. அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதற்காக திமுக சொல்லி ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என கூறினார்.