ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனுக்கு தனது அணியின் அமைப்பு செயலாளர் பதவி வழங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பாக செந்தில் முருகனும், இபிஎஸ் அணி சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில் இரு தரபுபும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்போடு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலை பெற அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்த 8 நாட்கள்!.. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இணைப்பு உண்மையா.? பல்டி அடித்த அண்ணாமலை - பின்னணி என்ன.?
புதிய பதவி வழங்கிய ஓபிஎஸ்
இன்று இரவு 7 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் ஓபிஎஸ் தனது அணி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் முருகனை வாபஸ் வாங்கவுள்ளார். இதன் காரணமாக எடப்பாடி அணி நிறுத்தும் வேட்பாளர் தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில், அதிமுக அமைப்பு செயலாளராக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் முருகன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார். அதிமுக நிர்வாகிகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
துர்கா ஸ்டாலினின் சகோதரி திடீர் மரணம்..! முதலமைச்சர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி