நெரிசலில் சிக்கி 4 பேர் பலி.! உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை தடை செய்திடுக..? தமிழக அரசுக்கு அன்புமணி அட்வைஸ்

By Ajmal KhanFirst Published Feb 5, 2023, 8:23 AM IST
Highlights

வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த நிலையில், முறைப்படுத்தப்படாத உதவி வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என  பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

நெரிசலில் சிக்கி 4 பேர் பலி

தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்ற உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெருச்சலில் நிக்கி 4 பெண்கள் உயிர் இழந்திருப்பதற்கு அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை?

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், அதில் ஏற்படும் நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளும் உயிரிழப்புகளும் தடுக்கப்பட வேண்டும்!பொதுமக்களுக்கு மனித நேயத்துடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அவை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்யப்படவேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத சூழலில் நெரிசல் ஏற்படுவதும், உயிரிழப்புகள் நிகழ்வதும் தவிர்க்க முடியாதவை! எத்தகைய உதவிகள் வழங்கப்படுவதாக இருந்தாலும், அரசின் அனுமதி பெற்று, காவல்துறையின் பாதுகாப்புடன் வழங்கப்பட வேண்டும்.

ரூ.10 லட்சம் இழப்பீடு

உதவி வழங்கும் இடத்தில் ஒரு நேரத்தில் 200 பேருக்கு மேல் கூட அனுமதிக்கக்கூடாது. மக்கள் வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்! முறைப்படுத்தப்படாத உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை அரசு தடை செய்ய வேண்டும். வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

பொங்கல் தினத்தில் வங்கி தேர்வு நடத்திய மத்திய அரசு.! தைப்பூச தினத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடத்துவதா? சீமான்
 

click me!