ஒரு சிலரின் நலனுக்காக அதிமுக சட்ட விதியில் மாற்றம்..! இபிஎஸ்யை விளாசிய ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Oct 17, 2022, 12:33 PM IST

தனிப்பட்ட ஒரு சில நபர்களின் நலன்களுக்காக அதிமுக சட்ட விதி திருத்தம் செய்யப்பட்டிருப்பது, அபாயகரமான சூழல் இது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


சட்ட பேரவையில் ஓபிஎஸ்

தமிழக சட்டபேரவை கூட்டமானது இன்று சென்னை தலைமைச் செயலகம் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு பங்கேற்றது. இதனையடுத்து  தமிழக சட்டபேரவையில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  இரங்கல் தீர்மானம் வாசிக்கபட்டு சில நிமிடம்  மெளன அஞ்சலி செலுத்தபட்டது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின்  ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்  மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இன்றைய சட்டசபை கூட்டத்தில் ஓபிஎஸ் எங்கு அமர்வார் என்று பரபரப்பு நிலவிய நிலையில்,ஏற்கனவே ஓபிஎஸ் அமரும் இருக்கையான எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர்ந்தார்.

Tap to resize

Latest Videos

20 நாளில் தமிழகத்தை முற்றுகையிடும் 50 மத்திய அமைச்சர்கள்.! என்ன காரணம் தெரியுமா.? ஸ்டாலினை அலறவிடும் அண்ணாமலை

அதிமுக சட்ட விதி மாற்றம்

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ், பேரவை தலைவர் அறிவிப்பின் அடிப்படையில் இன்றைய பேரவை கூட்டத்தில், பங்கேற்று உள்ளேன். அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்தார். அதிமுக என்ற கட்சி தொண்டர்களின் இயக்கம், எம் ஜி ஆர் மறைவுக்கு பிறகு16 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை  ஜெயலலிதா நடத்தினார். இரு தலைவர்கள் அதிமுகவுக்கு செய்த தியாகம், அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி உழைத்த இந்த இயக்கம். எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா காப்பாற்றிய அதிமுக சட்ட விதியை மாசு படாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறுபட்டது

அதற்கு அச்சுறுத்தல் வந்தாலும் சட்ட விதிகளை கட்டி காப்பாற்றும் நிலையில் தான் நாங்கள் உள்ளோம். தனிப்பட்ட ஒரு சில நபர்களின் நலன்களுக்காக அதிமுக சட்ட விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது அபாயகரமான சூழல் இது என தெரிவித்தார். இந்த நடவடிக்கை எம் ஜி ஆர், ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறுபட்டது என எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள்

தேவர் சிலை தங்க கவசம் யாருக்கு..? ஓபிஎஸ்யையும், இபிஎஸ்யையும் கழட்டிவிட்டு புதிய முடிவெடுத்த அறங்காவலர்

click me!