காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும் நேருகுடும்பத்தினரே மானசீக தலைவர்களாக இருப்பார்கள் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர்களின் வழிகாட்டுதலின்படிதான் கட்சித் தலைவர் நடப்பார் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும் நேருகுடும்பத்தினரே மானசீக தலைவர்களாக இருப்பார்கள் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர்களின் வழிகாட்டுதலின்படிதான் கட்சித் தலைவர் நடப்பார் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் தலைவராக வருவதற்கு அத்தனை தகுதியும் பெற்றவர் சசிதரூர் தான் என்றும் அவருக்கே தனது ஆதரவு என்றும் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: subramanian swamy: சீனாவுக்கு பரிசு!தேசத்திடம் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்!சுப்பிரமணியன் சுவாமி விளாசல்
அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் வாக்களிக்க காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரஸ் எம்பிக்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
undefined
இதையும் படியுங்கள்: அமித்ஷாவுக்கு 'தில் ' இருந்தா.. குஜராத்கு போய் இதைச் செல்லத் தயாரா.. பாஜகவைக்கு சவால் விட்ட திருமாவளவன்.
காலை ப. சிதம்பரம் காங் அலுவலகம் வந்து தனது வாக்கை செலுத்தினார், பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனநாயக முறையின் அடுத்த தலைவர் யார் என்பதை கட்சியின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பார்கள், என்னை பொறுத்தவரையில் சசிதரூர் அவர்கள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர், திறமையான பேச்சாளர், எழுத்தாற்றல் மிக்கவர், கட்சிக்கு வலிமை சேர்க்க கூடியவர், அரசியலுக்கு அப்பாற்பட்டு நாடுமுழுவதும் ஆதரவைப் பெற்றவர் சசிதரூர். நடுத்தர மக்களை அரவணைத்துச் செல்லக் கூடியவர். கட்சிக்கு அப்பாற்பட்டவர்களின் ஆதரவு கிடைக்க வேண்டுமென்றால் சசிதரூர் தலைவராக வேண்டும்.
என்னுடைய முழு ஆதரவு அவருக்குத்தான், 23 புத்தகங்களை எழுதியுள்ளார். நாளை மறுநாள் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. புதிய தலைவராக யார் வந்தாலும் நேரு குடும்பத்தில் இருப்பவர்களே காங்கிரஸ் கட்சியின் மானசீக தலைவர்களாக இருப்பார்கள். நேரு குடும்பத்தின் வழிகாட்டுதலின்படி புதிய தலைவர்கள் செயல்படுவார்கள். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ராகுல் காந்திதான் என்றும், அவரே என்றும் மானசீக தலைவராக இருப்பார் என்றும் ப.சிதம்பரம் கூறினார். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கிறது, குறிப்பாக கர்நாடகத்தில் காங்கிரஸ் வலுவடைந்துள்ளது, பாரத் ஜோடோ யாத்திரை வாக்குகளாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.