நாடு இல்லாத நாட்டிற்கு 9 மந்திரிகள்.. ஓபிஎஸ், பன்ருட்டி ராமச்சந்திரனை தெருவில் போட்டு புரட்டிய ஜெயக்குமார்.

By Ezhilarasan Babu  |  First Published Sep 27, 2022, 12:56 PM IST

நாடு இல்லாத நாட்டிற்கு ஒன்பது மந்திரிகள் என்பது போல தான் ஓ பன்னீர் செல்வத்தின் செயல்கள் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 


நாடு இல்லாத நாட்டிற்கு ஒன்பது மந்திரிகள் என்பது போல தான் ஓ பன்னீர் செல்வத்தின் செயல்கள் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழக இதழில் முன்னோடியான தமிழர் தந்தை ஆதித்தனாரின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஆதித்தனாருக்கு சிலை வைக்க வேண்டும் என உத்தரவிட்டவர் எம்ஜிஆர் தான், ஜெயலலிதா அவர்கள் தான் ஆதித்தனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் பதவி கொடுத்ததால் பண்ருட்டி ராமசந்திரனை அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்..! அதிர்ச்சியில் தொண்டர்கள்

இதேபோல கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, காவல்துறையினர் யார் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தானே இருந்தது என்று ஜெசிடி பிரபாகர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார், ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர், அப்படி என்றால் ஓபிஎஸ் திமுகவும் கைகோத்து செயல்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்: “அரசு மீது குறைசொல்ல ஏதுமில்லை” ஓபிஎஸ்க்கு கேகேஎஸ்எஸ்ஆர் பதிலடி

அதிமுக ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை  ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளாரே என செய்தியாளர்கள்  கேட்ட கேள்விக்கு, அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவியே இல்லை, நாடே இல்லாத ஒரு நாட்டிற்கு 9 மந்திரிகள் என்று சொல்வதைப் போலத்தான் பன்னீர்செல்வத்தின் செயல்கள் இருக்கிறது என விமர்சித்தார். திமுகவின் மாவட்ட அமைப்புகளுக்கான மனுத்தாக்கல் 700 பேர் கூட வரவில்லை, அதில்  எத்தனை பேர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும், திமுகவில் ஆதிக்கசாதியினருக்கே முக்கியத்துவம் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

அவர்கள் ஊருக்கு தான் உபதேசம் பண்ணுவார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தலைவர்களின் சிலைக்கு உடனடியாக இந்த அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும், திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் இவர்கள், சமூக நீதி என்று சொல்லும் இவர்களின் ஆட்சியில்தான் தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் என இரட்டை வேடம் போடக் கூடியவர்கள் திமுகவினர் என ஜெயக்குமார் விமர்சித்தார். 
 

click me!