பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக டெங்கு, இன்ஃபுளுயன்சா போன்ற காய்ச்சலால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்குமாறு அமைச்சருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.