ஏன் அவசர, அவசரமாக புதிய அமைச்சரவை பதவி ஏற்றது?

First Published Dec 6, 2016, 2:27 AM IST
Highlights


தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு இதயம் செயல் இழப்பால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. 

ஏன் இந்த அளவுக்கு அவசர, அவசரமாக புதிய அமைச்சரவை பொறுப்பு ஏற்க வேண்டும. 

முதல்வராக பொறுப்பில் இருக்கும் ஒருவர் திடீரென மரணம் அடையும் போது, அவருடன் சேர்ந்து ஒட்டுமொத்த அமைச்சரவையும், அரசியலமைப்பு சட்டப்படி செயல் இழந்ததாக அறிவிக்கப்படும்.  இதனால், ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களின் பதவிக்காலமும் முடிந்துவிட்டதாகவே அரசியல்சட்டப்படி எடுத்துக்கொள்ளப்படும். 

அதனால், புதிய சட்டப்பேரவை தலைவர் உடனடியாகத் தே ர்வு  செய்யப்பட்டு, புதிய முதல்வர் , அமைச்சரவை பொறுப்பு ஏற்றுக் கொண்டது. 

ஒரு வேளை ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே, ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக நியமித்து இருந்தால், இந்த சூழலில் புதிய அமைச்சரவை பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால், இறக்கும் வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த காரணத்தால், அவர் இறந்தவுடன் அவருடன் சேர்ந்து அவரின் அமைச்சரவையும் செயல் இழந்தது. இதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. 

இதற்கு முன் 1969, பிப்ரவரி 3-ந்தேதி அப்போது முதல் அமைச்சர் பதவியில் இருந்த தி.மு.க.வின் சி.என். அண்ணாதுரை திடீரென மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து பொறுப்பு முதல்அமைச்சரவாக நாவலர் நெடுஞ்செழியன் பொறுப்பு முதல்வராகப் பதவி ஏற்றார். அதன்பின், புதிய சட்டப்பேரவைத் தலைவரா மு.கருணாநிதி பொறுப்பேற்றார். 

அதேபோல,கடந்த 1987, டிசம்பர் 27ந்தேதி, அ.தி.மு.க.வின் எம்.ஜி.ராமசந்திரன் முதல்வர் பதவியில் இருக்கும் போதே மரணமடைந்தார். அப்போது இதே போல சூழல் எழவே பொறுப்பு முதல்வராக நாவலர் நெடுஞ்செழியன் பொறுப்பு ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!