என் குடும்பத்தில் யாரும் 60 வயதை எட்டியதில்லை - 60 வது பிறந்த நாளில் உருகிய ஜெயலலிதா

First Published Dec 6, 2016, 2:04 AM IST
Highlights


தனது 68 வது வயதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தனது 60 வது பிறந்த நாளில் உருக்கமுடன் கூறியதை இங்கு நினைவு கூர்கிறோம்

 

தனது 60 வது பிறந்த நாளை 2008 ஆம் ஆண்டு கொண்டாடியபோது அவர் நெகிழ்ச்சியுடன் ஒரு செய்தியை குறிப்பிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

என் தந்தையை 3 வயது இருக்கும் பொழுதே இழந்து விட்டேன்.  22 வயதில் தாயையும் இழந்துவிட்டேன என் குடும்பத்தில் எவரும் 60 வயதை எட்டியதில்லை... நான் எட்டிவிட்டேன் என்பது இறைவனின் அருள்... இனி எஞ்சிய வாழ்நாள் என்பது எனக்கான கூடுதல் அவகாசம் அதை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன் என்று தெரிவித்தார். 

 

அதன்படி அவர் மக்களுக்கான பல திட்டங்களை முக்கியமாக அடித்தட்டு கிராம மக்களுக்கான இலவச திட்டங்கள் , மாணவ மாணவியர் கல்விக்காக இலவச லேப்டாப் உள்ளிட்ட திட்டம் காலில் செருப்பு முதல் கல்விக்கான அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்கியவர் ஜெயலலிதா. 

அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டவர் , 60 வயதை கடந்து 8 ஆண்டுகள் கூட நிரம்பாத நிலையில் மறைந்தது தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும். 

 

click me!