
பிறப்பு 24 பிப்ரவரி ,1948 , மறைவு 5. டிசம்பர் 2016
பிறந்த இடம் மைசூர்
கல்வி மெட்ரிகுலேசன் கல்லூரி வாழ்வில் ஒரே நாள் அடியெடுத்து வைத்தார்,
1965 ல் கன்னட படமொன்றில் அறிமுகமானார் , பின்னர் தமிழில் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகமானார். ஆயிரத்தில் ஒருவன் அடுத்த படமென்றாலும் எம்ஜிஆருடன் ஆயிரத்தில் ஒருவனில் அறிமுகமானது பெரிய வரவேற்பை பெற்று தந்தது.
எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்த நடிகையும் ஜெயலலிதா தான். 28 படங்களில் நடித்தார்.
எம்ஜிஆர் , என்.டி.ஆர், ராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி த்ன் இந்திய நடிகர்களுடன் நடித்தவர். ஆங்கில படமொன்றிலும் , இந்தி படத்திலும் நடித்துள்ளார்.
சிறந்த பேச்சாளர் , சிறந்த பாடகி , சிறந்த நடிப்பு , சிறந்த சொல்லாற்றல் , சிறந்த எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர் ஜெயலலிதா
அரசியலில் அனுபவம் இல்லாவிட்டாலும் 1982 ல் எம்ஜிஆர் மூலம் அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட போது சிறப்பாக செயல்பட்டார்.
1984 சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்த போது தமிழகத்தில் சூறாவளியாக் சுற்றி பிரச்சரம் செய்து அதிமுக வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
1983ல் அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்தார். 1984ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1989 வரை அவர் தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கும் வரை அப்பதவியிலிருந்தார்.
எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பின் 1987ல் அ.இ.அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதைத் தொடர்ந்து 1989ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பெண் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரனார்.
இரண்டாக உடைந்த அ.இ.அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் அமைந்தது.. அதைத்தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 1989ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மீண்டும் அ.இ.அ..தி.மு.க. இரட்டை இலை சின்னத்தை தனது தேர்தல் சின்னமாக பெற்றது. 1991ல் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்லில் காங்கிரசுடன் இணைந்து தமிழ்நாடு மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதியிலும் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு 225 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை அ.இ.அ.தி.மு.க. பெற்றது இவரது சாதனை.
இந்த தேர்தலில் ஜெயலலிதா அவர்கள் பர்கூர் மற்றும் காங்கேயம் தொகுதிகளில் பெற்றி பெற்றார். பின்பு காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். சட்டமன்றத்திற்கு 2002ம் ஆண்டு மற்றும் 2006ம் ஆண்டில் ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011ம் ஆண்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நான்காவது முறையாக முதலமைச்சர் ஆனார்.
தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவை தொடர் வெற்றி பெற வைத்தார். மீண்டும் முதல்வராக பதவியேற்ற அவர் முதல்வராகவே மறைந்தார்.
புரட்சித்தலைவி என்றழைக்கப்பட்டாலும் அம்மா என்று அழைக்கப்பட்டது தமிழகம் தாண்டி இந்தியா முழுதும் பிரபலமான பெயரானது.