ஆணாதிக்க சமுதாயத்தில் வரலாற்று சாதனையாளர் ஜெயலலிதா - திருமாவளவன் பேட்டி

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 04:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
ஆணாதிக்க சமுதாயத்தில் வரலாற்று சாதனையாளர் ஜெயலலிதா - திருமாவளவன் பேட்டி

சுருக்கம்

ஆணதிக்க சமுதாயத்தில் தடைகளை கடந்து வரலாற்று சாதனை படைத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்று அப்போலோவுக்கு முதல்வரை காண வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண்ணாக போராடி இந்திய அரசியல் வானிலே வரலாற்று சாதனையாளராக நீடித்த புகழுடன் விளங்கி வருகிறார் நம் முதல்வர்.

ஜாதி, மதங்களையெல்லாம் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றலுடைய பெருந்தலைவராக இயங்கிவந்திருக்கிறார்.

கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களுடன் லட்சோப லட்ச விடுதலைச்சிறுத்தைகளும் இணைந்து முதல்வர் குணமடைய வேண்டும் என்று வேண்டுகிறோம்.

முதல்வர் நலம் பெற வேண்டும். 

எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பிறகு 30 ஆண்டுகாலம் வெற்றிகரமாக அதிமுகவை வழிநடத்தியதோடு உலகத்தமிழர்கள் அனைவரும் போற்றத்தக்கவகையில் விளங்குகிறார்.

அனைவரின் நம்பிக்கையும் வீண் போகாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?