எம்ஜிஆருக்கு அருகில் நல்லடக்கம் ?

First Published Dec 6, 2016, 2:17 AM IST
Highlights


உடல்நலக் குறைவால் காலமான  தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு எம்ஜிஆர் சமாதி அருகிலேயே உடல் அடக்கம் செய்யப்படுகிறது. 

இன்று காலை போயஸ் இல்லத்தில் சடங்குகள் முடிந்தவுடன் 10 மணி அளவில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்காக ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர்  இன்று மாலையே அவரது உடல் அடக்கம் நடைபெறும். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் ஜெயலலிதா (68) உடல்நலக் குறைவு  காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதயம் செயலிழந்ததால் ஜெயலலிதா மரணமடைந்த ஜெயலலிதாவின் உடல் அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 

ஜெயலலிதாவின் உடலுக்கு அவரது இல்லத்தில் குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஜெயலலிதாவின் உடல் ஓமாந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதியின் அருகிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது. 

click me!