அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை தொடர்ந்து டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் தங்கள் இணைத்து கொண்டனர்.
அதிமுக அதிகார மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரன், சசிகலா என பிரிந்து சென்ற நிலையில், தற்போது ஓ.பன்னீர் செல்வமும் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்றங்கள் மூலமாக சட்ட போராட்டம் நடத்துகிறார். தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறி வருகிறார். இதனையடுத்து தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடக மாநிலத்திலும் தங்கள் அணி நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்துள்ளார். திருச்சியில் மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்தவும், தொண்டர்களை சந்திக்கும் வகையில் சுற்றுப்பயணமும் மேற்கொள்ள ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியை பார்க்க பாஸ் கோரிய எஸ்.பி.வேலுமணி... சுவாரஸ்ய பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ்
அதே போல அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அணியில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர். எனவே அந்த அணியில் இருக்கும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தற்போது அதிமுக தலைமை அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில்,
அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியச் செயலாளர் திரு. R. செந்தில்குமார், பரமக்குடி தெற்கு நகரச் செயலாளர் திரு. M. உமாமகேஸ்வரன். போகலூர் ஒன்றியச் செயலாளர் திரு. K. ராஜாராம்பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களால் அறிவிக்கப்பட்ட திரு. P. கடலாடி வடக்கு ஒன்றியச் சண்முகபாண்டியன், கடலாடி தெற்கு செயலாளர் ஒன்றியச் செயலாளர் திரு. M. சத்தியமூர்த்தி ஆகியோரும்; ஆக மொத்தம் 50 பேர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்