இரட்டை இலையை முடக்கி சசிக்கு “தொப்பி” வாங்கி கொடுத்த குஷியில் ஒபிஎஸ்...

Asianet News Tamil  
Published : Mar 23, 2017, 04:03 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
இரட்டை இலையை முடக்கி சசிக்கு “தொப்பி” வாங்கி கொடுத்த குஷியில் ஒபிஎஸ்...

சுருக்கம்

ops and sasikala planned to won the admk two leaf logo

இரட்டை இலையை முடக்கி சசிக்கு “தொப்பி” வாங்கி கொடுத்த குஷியில் ஒபிஎஸ்...

இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் என்றால் என்ன....இருக்கவே இருக்கு இரட்டை மின்கம்பம் இதுபோதுமே நமக்கு என பெருமூச்சி விட்டுள்ளனர் ஒபிஎஸ் அணியினர்.

இரட்டை இலை சின்னத்திற்கு, ஒபிஎஸ் அணியினரும் சசிகலா அணியினரும் வாதாடி வாதாடி, போராடி போராடி கடைசியில் ...இரட்டை இலை சின்னத்தையே முடக்கி விட்டது தேர்தல் ஆணையம்.

சின்னம் ஒதுக்கும் முன் நடந்தது என்ன என்பதை பற்றி பார்க்கலாம். சின்னம் ஒதுக்குவதற்கு முன்பாக, தேர்தல் ஆணையத்தில் ஒபிஎஸ் அணி இரட்டை இரட்டை விளக்கு மின்கம்பம்  சின்னம் வேண்டும் என  கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒபிஎஸ்  அணி  எந்த  சின்னம்  வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்  என்பதை  ஆவலுடன்  எதிர்பார்த்த சசிகலா அணியினரும் அதே சின்னம் தான் வேண்டும் என கேட்டுள்ளனர் .இதனை கேட்டு  கொஞ்சம் டென்ஷனான அதிகாரிகள், அட அவர்கள் கேட்டே அதே  சின்னத்தையே ஏன் கேட்கீறீர்கள் என  கேள்வி எழுப்ப, அதன் பின் ஆட்டோ சின்னத்தை கேட்டுள்ளனர் சசிகலா அணியினர்.  ஆனால் அதற்குள்ளாக  தினகரனுடன் கடைசியாக சில ஆலோசனைகள் மேற்கொண்டு,தொப்பி சின்னத்திற்கு  ஒகே சொல்லி இருகிறார்கள்.

இதெல்லாம் முக்கியம் இல்லை. ஒபிஎஸ் அணியினர் கோரிய அதே இரட்டை மின்கம்பம் சின்னத்தை கேட்டு சசிகலா அணியினரும் உரிமை  கோரினர் . காரணம் இரட்டை  மின் கம்பம்  சின்னம் பார்ப்பதற்கு  இரட்டை இல்லை போன்றே காணப்படுவதால், அந்த சின்னத்தை பெற முடியவில்லையே என “கைக்கு  எட்டினது வாய்க்கு எட்டாமல் போனது” போல கொஞ்சம் பீல் பண்ணாராம் தினகரன் .    

 

PREV
click me!

Recommended Stories

Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!
Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!