
தீபாவுக்கும் தனக்கும் ஒட்டும் இல்லை உறவுமில்லை என்று அவரது கணவர் மாதவன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஜூரம் தகித்து வருகிறது.. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் 60 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலையில் இருந்தே அனல் கக்கும் பிரச்சாரத்தை ஆர்.கே. நகர் சந்திக்கப் போகிறது.
மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கடந்த இரு நாட்களாக சீனுக்கு வராத தீபா கணவர் மாதவன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார். NEWS FAST இணையதளம் அவரை தொடர் கொள்ள முயன்றது.
செய்தியாளருக்கும் மாதவனுக்கும் இடையே நடைபெற்ற
தொலைபேசி உரையாடல் உள்ளது உள்ளபடி
செய்தியாளர் : சார் வணக்கம் NEWS FAST ல் இருந்து பேசறோம். தீபாவின் பேட்டி வேணும் சார்
மாதவன் : (எரிச்சலான குரலில்) தீபாவின் பேட்டி வேணுமுனா அவரிடமே கேளுங்க. என் பேட்டினா தராளாமாகத் தரேன்..
செய்தியாளர் : சார் தீபா தொலைபேசி எண் எதாவது இருக்கா?
மாதவன் : "தீபா மொபைல் நம்பர் எங்கிட்ட இல்லைங்க.
எனக்கும் அவருக்கும் ஒட்டும் இல்ல உறவும் இல்ல. அவங்கள பத்தி எங்கட்ட எதுக்கு பேசறீங்க.."
ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு என்ன பிரச்சனை மிஸ்டர் மாதவன் ?