ஆளும் அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை – சொல்கிறார் ஓபிஎஸ்

First Published May 28, 2018, 10:23 AM IST
Highlights
ops and jeyakumar meet thoothukudi people


துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அனைவரது நெஞ்சை உலுக்கும் சம்பவம். இந்த சம்பவத்தில் காயமுற்ற அனைவரையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளோம். 2013இல் ஸ்டெர்லைட் ஆலையை ஜெ மூடினார் பின் பசுமை தீர்ப்பாய உத்தரவு படி ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.

  பசுமை தீர்ப்பாயத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கு உச்ச நிதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது .  ஆலைவிரிவுக்கு அனுமதி மறுப்பு ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்பது மக்களின் விருப்பம் அதேயே அரசு செய்யும் நிரந்தரமாக மூட ஆயத்தங்கள் செய்யப்படும். என்று தெரிவித்தார்.

இன்றைய சூழலில் தூத்துக்குடியில் அமைதி திரும்புகிறது என்றும் அமைதிதொடர மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்துவருகிறது என்று கூறினார். 13 பேர் மட்டுமே இறந்துள்ளனர். 47 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளோம். காயம்பட்ட குடும்பத்திற்கு பிற்காலத்தில் எந்த வித கஸ்டமும் இல்லாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்வோம். மக்களுக்கு மத்தியில் நடக்கும் அதிமுக ஆட்சியில் மக்கள் எந்தவித அதிர்ப்தியும்  இல்லை. தமிழக அரசு கடமையை செய்யும். எனக் கூறினார்.

துப்பாக்கி சூட்டிற்கு யார் அனுமதி அளித்த்து எனக் கேட்ட்தற்கு பதிலேதும் சொல்லவில்லை.

click me!