இவர் என்னைக்கு பதவி விலகுகிறாரோ அப்பத்தான் மக்களுக்கு பாதுகாப்பு….போட்டுத் தாக்கும் செயல் தல !!

First Published May 28, 2018, 8:28 AM IST
Highlights
edappdi palanisamy step down from cm told stalin


காவல் துறையை காவி மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றைக்கு பதவியில் இருந்து விலகுகிறாரோ அன்றுதான் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22 ஆம் தேதி நடந்த முற்றுகைப் போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் அப்பாவி பொது மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்ததை மீறி அவர்கள் அங்கு சென்றதால் நடிகர் கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல் முருகன், நேற்று முன்தினம் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்க தூத்துக்குடி சென்றார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், வேறு ஒரு வழக்கில் வேல் முருகளை சிறையில் அடைத்தனர்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்

இந்நிலையில் , தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் , தூத்துக்குடியில் 13 பேரை கொலை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது ஒரு வழக்குக்கூட பதிவு செய்ய துப்பில்லாத அ.தி.மு.க. அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

.காவல் துறையை காவி மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகுவதே தமிழக மக்களுக்கு பாதுகாப்பு என்றும் ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார்..

click me!