பொது இடங்களில் அதிமுகவினர் வாயைமூடிப் பேசவும்... ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி..!

By vinoth kumarFirst Published Jun 9, 2019, 4:45 PM IST
Highlights

அதிமுக தொண்டர்கள் பொதுவெளியில், கட்சியின் நடைமுறை, தேர்தல் முடிவுகள் குறித்து பேசவேண்டாம் என்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக தொண்டர்கள் பொதுவெளியில், கட்சியின் நடைமுறை, தேர்தல் முடிவுகள் குறித்து பேசவேண்டாம் என்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேசமயம் 22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் அதிமுக தலைமை பற்றி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேற்று தெரிவித்த கருத்து அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும். அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை. இரு தலைமைகள் இருப்பதால் முடிவுகள் எடுக்க முடியவில்லை. இதை பொதுக்குழுவில் வலியுறுத்துவோம்.” என ராஜன் செல்லப்பா தெரிவித்த கருத்துகள் அக்கட்சியினர் விவாதிக்கும் முக்கிய பொருளாகியிருந்தது. சிலர் ராஜன் செல்லப்பா கருத்துக்கு ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில், ''அதிமுக செயல்பாடுகள் குறித்து கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் வரவேற்கத்தக்கவை அல்ல. அதிமுக நிர்வாக முறை பற்றியோ, தேர்தல் முடிவுகள் குறித்தோ பொதுவெளியில் யாரும் கருத்து சொல்லவேண்டாம். அதிமுகவின் நலன் கருதி கருத்துக்களை யார் கூற விரும்பினாலும் அதற்கென பொதுக்குழு, செயற்குழு ஆலோசனைக்கூட்டம் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். முதல்வர் பதவியில் அமர நினைப்பவர்களுக்கு நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்வதுபோல அமைந்துவிடும். 

இதுவரை நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும். இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முன்னாள் ஜெயலலிதா வழிகாட்டுதலில் செயல்பட்டதை போன்றே தொடர்ந்து செயல்பட உறுதி ஏற்போம் என்று, 'புரட்சித் தலைவி அம்மா கற்றுத்தந்த அரசியல் பாடத்தை மறவாதீர்' என்ற தலைப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!