
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு மாறாக சசிகலாவுக்கு ஆதரவு அளித்தது வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, , அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள், உண்மையை உணர்ந்து, தங்கள் பக்கம் வர வேண்டும் என்று ஓபிஎஸ் அன்பாக அழைப்பு விடுத்துள்ளார்,
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுக கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்திற்குள் சென்று விடக்கூடாது என, நாங்கள் வலியுறுத்துவதால்தான் மக்கள் தங்கள் பக்கம் உள்ளதாக தெரிவித்தார்.
நான் இப்படி சொல்வதால் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும்,, தினகரனும் கடும் எரிச்சல் அடைந்திருப்பதாக கூறிய ஓபிஎஸ், தற்போது, கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்தின் கையில் சென்று விடக்கூடாது என்பது தான் அனைவரது பிரச்சனை என்று தெரிவித்தார்,
ஒரு குடும்பத்தின் கைக்குள் கட்சியும், ஆட்சியும் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தானே, ஜெயலலிதாவின் எண்ணம். அவரது எண்ணத்திற்கு, மாறாக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் ஏன் நடந்து கொள்கிறீகள் என கேள்வி எழுப்பினார்.
டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றால்,எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்கப்படுவார்; இது உறுதி என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவின் கொள்கைபடி நடக்க வேண்டும் என, நாங்கள் கூறுகிறோம். ஆனால் சசிகலாவும், தினகரனும் , மாறுபட்டு நிற்கின்றனர்.
ஒரு குடும்பத்திற்குள், அண்ணன், தம்பி சண்டை ஏற்பட்டுவது இயற்கை.. வழி தவறி சென்ற தம்பியை, வா... என அழைப்பதில்லையா ? அதுபோல ,தற்போது நாங்கள் அழைக்கிறோம்.
எனவே தயவுசெய்து ஜெயலலிதாவின் எண்ணப்படி குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எங்கள் அணிக்கு வாருங்கள் என ஓபிஎஸ் அழைப்புவிடுத்தார்.