பாஜக - ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக ஒன்றினையும் எதிர்க்கட்சிகள்.. காங்கிரஸின் திட்டம் என்ன.? ராகுல் பரபர தகவல்.!

Published : Apr 08, 2022, 09:28 PM IST
பாஜக - ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக ஒன்றினையும் எதிர்க்கட்சிகள்.. காங்கிரஸின் திட்டம் என்ன.? ராகுல் பரபர தகவல்.!

சுருக்கம்

நாடு பிரிந்து கிடக்கிறது.  இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றினைக்க வேண்டும்.  நம்முடைய வரலாற்றின் ஒரு பகுதியாகவே சகோதரத்துவம் இருந்தது. அந்தப் பாதையில் மீண்டும் நாம் நடை போட வேண்டும்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒன்றினைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

வலுவான கூட்டணி

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவுக்கு எதிராக அணி திரட்டும் பேச்சுகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் சூடுபிடித்துள்ளன. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி என பல கட்சிகளும் இதுபோன்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அடங்கிய வலுவான கூட்டணியைக் கட்டமைக்க இந்தக் கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. இதில், காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு அதிகம் தேவைப்படும் என்றாலும், அக்கட்சி தலைமையில் கூட்டணி அமைவதை பிற கட்சிகள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றன.

சரத் யாதவுடன் சந்திப்பு

இந்நிலையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒன்று திரட்டுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னால் மத்திய அமைச்சர் சரத் யாதவ்வின் உடல்நிலைப் பற்றி விசாரிப்பதற்காக ராகுல் காந்தி அவருடைய வீட்டுக்கு சென்றார். அவருடனான சந்திப்பு முடிந்த பிறகு ராகுல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சரத் யாதவ் ஓர் அரசியல் குரு. சரத் யாதவ் என்னுடன் பேசும்போது நாட்டின் நிலைமை மிக மோசமடைந்து விட்டதாகச் சொன்னார். 

கட்டமைப்பு உருவாக்கம்

நாட்டில் வெறுப்புணர்வு பரப்பப்பட்டு வருகிறது.  நாடு பிரிந்து கிடக்கிறது.  இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றினைக்க வேண்டும்.  நம்முடைய வரலாற்றின் ஒரு பகுதியாகவே சகோதரத்துவம் இருந்தது. அந்தப் பாதையில் மீண்டும் நாம் நடை போட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஊடக அமைப்புகள், பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆகியோர் ஓர் உண்மையை மறைத்து விட்டனர். அந்த உண்மை மெதுவாக நமக்கு முன் வரும்.  இலங்கையில் தற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.  அங்கே உண்மை வெளிச்சத்துக்கு வந்து விட்டது.  இந்தியாவிலும் அந்த உண்மை விரைவில் வெளியே வரும்.

 நாட்டில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒன்றினைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.  அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்துவது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!