திமுக வ.க.செவை போட்டுத் தள்ளிய அதிமுகவினர்.. 5 நாள் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி.

Published : Apr 08, 2022, 08:29 PM IST
திமுக வ.க.செவை போட்டுத் தள்ளிய அதிமுகவினர்.. 5 நாள் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி.

சுருக்கம்

இந்த சம்பவத்தில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் கணேசன், அவர் மகன் தினேஷ்குமார் மற்றும் இன்பம், கார்த்தி, குமரேசன் ஆகிய 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை  சரணடைந்தனர். 

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கி ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்த வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அப்பாசாமி தெருவைச்சேர்ந்தார் சௌந்தரராஜன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவர் 59வது வட்ட கழக செயலாளராகவும் இருந்து வருகிறார்.  இவர் அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் சேர்ந்தவராவார்.

பிராட்வே பேருந்து நிலையம் அருகே கரும்புச்சாறு கடை நடத்தி  வந்தார். வெயில் காலம் ஆரம்பித்து விட்டதால் திமுக சார்பில் பிராட்வே பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் ஒன்றும் அமைத்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த தண்ணீர் பந்தலுக்கு தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சௌந்தர்ராஜனை சரமாரியாக வெட்டி சாய்த்தது. சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சௌந்தரராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் கணேசன், அவர் மகன் தினேஷ்குமார் மற்றும் இன்பம், கார்த்தி, குமரேசன் ஆகிய 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை  சரணடைந்தனர். கொலை செய்யப்பட்ட சௌந்தர்ராஜன் திமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிலையில் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே அவர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் வைத்தார். அதிமுக பிரமுகர் கணேசன் தண்ணீர் பந்தலுக்கு அருகே கடை வைத்து நடத்தி வருகிறார். கடைக்கு அருகில் கடந்தாண்டு அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் வைத்த சௌந்தரராஜன் இந்த ஆண்டு அங்கு திமுக தண்ணீர் பந்தல் வைத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே கொலைக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது. 

மேலும் இது தொடர்பான காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், போஸ்டர்கள் ஒட்டுவதில் அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே விரோதம் இருந்ததாகவுக் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் சரண்டைந்த 5 பேரையும் விசாரணைக்கு அனுமதிக்க கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் எஸ்பிளனேட் காவல்துறையினர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், அதிமுக பிரமுகர்கள் 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எஸ்பிளனேட் காவல்துறையினருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!
50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!