எங்களுக்கு ஓட்டுப்போடலைல பணத்தை திருப்பிக் கொடுங்க ! வாக்காளர்களை மிரட்டும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் !! தேனி அட்ராசிட்டி !!

By Selvanayagam PFirst Published Apr 22, 2019, 8:19 AM IST
Highlights

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுகவிற்கு யாரும் வாக்களிக்கவில்லை அதனால் தாங்கள் கொடுத்த ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப தரும்படி  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்காளர்களை மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ன் மகன் ஓபி.ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அமமுக சார்பில் அக்கட்சியின் தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். மூன்று வேட்பாளர்களுமே முக்கியமானவர்கள் என்பதால் போட்டி அங்கு பலமாக இருந்தது. அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் ஆதரவாளர்கள் கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் வழங்கியது தெரியவந்தது. இது தொடர்பாக கவிதா என்பவர் பணம் வழங்கிய வீடியோ வெளியாகி வைரலானது.

இதே போல் அமமுக சார்பில் ஆண்டிபட்டியில் பணம் வழங்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து ரெய்டு நடத்திய பறக்கும் படையினர் ஒரு விடுதியில் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே வாக்குப்திவு நடைபெற்று முடிந்த நிலையில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு பணத்தை வாங்கிக் கொண்டு பலர் வாக்களிக்கவில்லை என அதிமுகவினர் சந்தேகப்படுகின்றனர்.

இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தேனி தொகுதியின் பல இடங்களில் ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பித் தரும்படி மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து திமுக – காங்கிரஸ் கூட்டணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

click me!