ராகுலுக்கு ஒகேன்னா நானே வேட்பாளர்... மோடியை எதிர்க்க பிரியங்கா அதிரடி திட்டம்!

By Asianet TamilFirst Published Apr 22, 2019, 7:24 AM IST
Highlights

காங்கிரஸ் தலைவரிடம் வாரணாசி தொகுதி வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘அது சஸ்பென்ஸ்’ என்று தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதிக்கு மட்டும் இன்னும் காங்கிரஸ் வேட்பாளாரை அறிவிக்கவில்லை.
 

வாரணாசி தொகுதியில் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு, “நீங்கள் அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று ராகுலின் சகோதரியும் உ.பி. கிழக்கு பகுதி பொதுச்செயலாளருமான பிரியங்கா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொகுதிகளில் பிரியங்கா கடந்த இரண்டு நாட்களாகப் பிரசாரம் மேற்கொண்டார். இந்தப் பிரசாரத்தின் போது புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட வயநாடு தொகுதியைச் சேர்ந்த வீரர் வசந்த் குமார் வீட்டுக்கு சென்றி, அவருடைய  குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து பிரியங்கா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

 
அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர் வாரணாசியில் போட்டியிட அனுமதித்தால் போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார். “நாட்டை காக்கவே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. நம் எல்லோருக்கும் நம் மதத்தை, நம் உணவுமுறையை, நம் வாழ்க்கை முறையை வெளிப்படுத்த சுதந்திரம் இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய காரியத்துக்காகப் போராடிகொண்டிருக்கிகிறோம். மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
குறுகிய மனம் கொண்டவர்கள் விதிக்கும் சட்டத் திட்டங்களிலிருந்து இந்தத் தேசத்தை எல்லோரும் காக்க வேண்டும். விமர்சனங்கள் எழுந்தால், அதைக் கண்டு அஞ்சும் அரசு இங்கு உள்ளது. மக்களின் குரலை ஒடுக்க அரசு விரும்புகிறது. எனவே மக்கள் வாக்குச்சாவடிக்கு போகிறபோது, இதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று செல்லும் இடங்களில் எல்லாம் கேட்கிறீர்காள். நீங்கள் அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள். வாரணாசியில் நான் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கூறினால், நான் அங்கே போட்டியிடுவதில் மகிழ்ச்சி அடைவேன்” எனப் பதில் அளித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஊழியர் கூட்டம் ஒன்றில் பிரியங்கா பேசிய போது, அவரை கட்சி தொண்டர்கள் ரேபரேலியில் போட்டியிட வலியுறுத்தினார்கள். அப்போது பிரியங்கா, “ஏன், வாரணாசியில் போட்டியிடக்கூடாதா?” எனக் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இதேபோல காங்கிரஸ் தலைவரிடம் வாரணாசி தொகுதி வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பியபோது, ‘அது சஸ்பென்ஸ்’ என்று தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதிக்கு மட்டும் இன்னும் காங்கிரஸ் வேட்பாளாரை அறிவிக்கவில்லை.

click me!