
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத்தை தன்ப்பட் காரணங்களுக்காக மட்டுமே ஆதரிப்பதாகவும். ஆனால் பாஜவுடன் கூட்டணி என்பது நடக்காத காரியம் என்றும் ஐக்கிய ஜனதாதள கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளகட்சியின் எம்பி தியாகி , பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எங்கள் கட்சி ஆதரிப்பது தனிப்பட்ட காரணங்களுக்காக என தெரிவித்தார்.
ராம்நாத் கோவிந்த் பீகார் ஆளுநராக இருந்த கடந்த 2 ஆண்டுகளில் மாநில அரசுக்கு மிகவும் நேர்மையுடனும், மோதல்போக்கு இல்லாமலும் செயலாற்றியதாக குறிப்பிட்டார்.
ராம்நாத்தின் பெருந்தன்மை மற்றும் நடத்தை காரணமாக ஈர்க்கப்பட்ட நிதிஷ்குமார், ஜனாதிபதி வேட்பாளராக அவரை ஆதரிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் என கூறிய தியாகி, . அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்..