அந்தர் பல்டி அடித்த மாயாவதி….மீராகுமாருக்கு ஆதரவு அளிக்கப்போவதாக திடீர் அறிவிப்பு…

Asianet News Tamil  
Published : Jun 23, 2017, 08:03 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
அந்தர் பல்டி அடித்த மாயாவதி….மீராகுமாருக்கு ஆதரவு அளிக்கப்போவதாக திடீர் அறிவிப்பு…

சுருக்கம்

mayawathi support to Meerakumar in president election

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக அறிவித்த வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக சொன்ன பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிஇ தற்போது  தனது நிலையை மாற்றிக்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக  வேட்பாளராக தலித் சமூகத்தைச் சேர்ந்த  ராம்நாத் கோவிந்த் கடந்த 19-ந் தேதி அறிவிக்கப்பட்டார். அப்போது  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ராம்நாத்துக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டார்.



ராம்நாத் கோவிந்த் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்பு உடையவராக இருந்தாலும் அவர் ஒரு தலித்தாக இருப்பதால், அவருக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்தார்.

இதனிடையே  காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டார். இவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மாயாவதியின் திடீரென நிலைப்பாடு மாறியது. அந்தர் பல்டி அடித்த அவர், தற்போது மீரா குமாரை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமார் பாஜக வேட்பாளர் ராம்நாத்தை விட  திறமையானவர் என்பதால் அவருக்கே ஆதரவு அளிக்கப் போவதாக , தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?