
பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பபட்டுள்ள ராம்நாத் கோவிந்த் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இல்லத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜுலை 25 ஆம் தேதி முடிவடைவதையொட்டி, புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், இன்று பேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிகழ்வின் போது, பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
குடியரசுத் தலைவர் வேட்பாளரான ராம்நாத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, உள்ளிட்டோர் பரிந்துரை செய்கின்றனர்.
இதனிடையே முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் எதிர்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் வாக்கெடுப்பு தவிர்க்க முடியாததாகியுள்ளது.
அதே நேரத்தில் இரு தரப்பினரும் தலித் வேட்பாளர்களையே நிறுத்தியிருப்பதால் ஜனாதிபதி தேர்தல் தலித்துளுக்கு இடையேயான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இன்றும் ஒரு சில நாட்களில் மீராகுமாரும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்த ராம்நாத் கோவிந்த் அவரிடம் வாழ்த்துப் பெற்றார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.