மோடியை தில்லாக எதிர்க்கக்கூடிய தைரியம் ஸ்டாலினுக்கு மட்டும்தான் இருக்கு.. சரவெடியாய் வெடிக்கும் EVKS..!

Published : Mar 17, 2022, 05:34 AM IST
மோடியை தில்லாக எதிர்க்கக்கூடிய தைரியம் ஸ்டாலினுக்கு மட்டும்தான் இருக்கு.. சரவெடியாய் வெடிக்கும் EVKS..!

சுருக்கம்

தமிழகத்தில் துப்பாக்கி எடுக்காமலேயே அனைத்து இடங்களிலும் தனது சாம்ராஜ்யத்தை நிறுவியவர் காந்தி அடிகள். அப்படிப்பட்ட காந்தியடிகளை கொன்ற கோட்சேவை கொண்டாடக்கூடிய நிலைமை இன்று இந்தியாவில் வந்துவிட்டது இது எவ்வளவு மோசமான செயல்.

இன்றைக்கு தமிழகத்தை ஆட்சி செய்யும் மு.க.ஸ்டாலின் தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் காக்கக்கூடிய ஒரு முதல்வராக இருக்கிறார் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

சென்னை பெரம்பூர் வீனஸ் பகுதியில்  உள்ள சீரமைக்கப்பட்ட காந்தி திறப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். அப்போது, பேசிய அவர் தமிழகத்தில் துப்பாக்கி எடுக்காமலேயே அனைத்து இடங்களிலும் தனது சாம்ராஜ்யத்தை நிறுவியவர் காந்தி அடிகள். அப்படிப்பட்ட காந்தியடிகளை கொன்ற கோட்சேவை கொண்டாடக்கூடிய நிலைமை இன்று இந்தியாவில் வந்துவிட்டது இது எவ்வளவு மோசமான செயல்.

இதையும் படிங்க;- தமிழகத்தில் ஸ்டாலின்-ராகுல் மாயாஜாலம்.. எதிர்க்கட்சிகள் திரண்டால் 2024-ல் ஜமாய்க்கலாம்.. காங்கிரஸ் கணக்கு!

தமிழ் கலாச்சாரத்தையும் காக்கக்கூடிய ஒரு முதல்வர் ஸ்டாலின்

சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பாஜக சார்பில் ஒரே கவுன்சிலர் மட்டுமே வெற்றி பெற்றார். அந்த அம்மையார் எப்படி ஜெயித்தார் என்று சொன்னால் காந்தியை கொன்ற கோட்சேவை நல்லவர் என்று கூறி வெற்றி பெற்றார். இதுமிகவும் மோசமான முன்னுதாரணம் இன்றைய நிலையில் காங்கிரஸ் பெற்ற தோல்வி என்பது வருங்காலத்திற்கான படிகளாக  கருதப்படும். இன்றைக்கு தமிழகத்தை ஆட்சி செய்யும் மு.க.ஸ்டாலின் தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் காக்கக்கூடிய ஒரு முதல்வராக இருக்கிறார்.

மோடியை எதிர்க்கக்கூடியவர் ஸ்டாலின்

எனவே அவரது கரங்களை பலப்படுத்த வேண்டியது காங்கிரஸ்கார்களின் கடமை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு பதவியை பற்றி கவலைப்படாமல் மோடியை எதிர்க்கக்கூடிய தைரியம் ஸ்டாலினுக்கு மட்டும்தான் உள்ளது. இதனால், அவரதுசரங்களை பலப்படுத்த வேண்டும் என  ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!