எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்த புரிதல் இல்லாமல் அண்ணாமலை விமர்சித்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்த புரிதல் இல்லாமல் அண்ணாமலை விமர்சித்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக குடும்பத்திற்கு நெருக்கமான பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு, 4,442 கோடி ரூபாய்க்கு டான்ஜட்கோ ஒப்பந்தம் வழங்கியுள்ளது. தரம் இல்லாத ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு இந்த நிறுவனம் 350 கோடி ரூபாய் கடனில் இருந்தது. வங்கியில் வெறும் 35 கோடி மட்டுமே கையிருப்பு வைத்திருந்த நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி முடிவதற்கு முன்னர் 35,000 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது. டான்ஜட்கோ ஒப்பந்தம் வழங்கினால் முந்தைய திமுக ஆட்சி காலம் போல் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் மின்வெட்டு தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.
undefined
அண்ணாமலையின் குற்றச்சாட்டை மறுத்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து அண்ணாமலைக்கு புரிதல் இல்லை. அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் அண்ணாமலை விமர்சித்து உள்ளார். 2006 செப்டம்பரில் தொடங்கிய பணிகள் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முடியாமல் இருந்தன. குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் முழு விபரங்களையும் தெரிந்துகொள்வது அவசியம். 2020ல் மின்திட்டங்களுக்கு வைப்பு தொகை 3% என மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
2019-ல் போடப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படியே தற்போது ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி 24 மணி நேரத்தில் தெளிவுப்படுத்த வேண்டும். அண்ணாமலை கூறிய புகாரை நிரூபிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே மின்வாரிய திட்டங்களுக்கு வைப்புத்தொகை நிர்ணயம். மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை நன்கு அறிந்த பின்னரே விமர்சிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாத அளவிற்கு சீரான மின் விநியோகம் நடைபெறுகிறது; டாஸ்மாக் நிறுவனத்தில் ஒரு ரூபாய் கூட வரி ஏய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.