ஒரே ஒரு ட்வீட், ஒஹோன்னு வாழ்க்கை... #GOBackModi-க்காக ஓவியாவுக்கு ஒரு கோடி ரூபாயா..?

By Thiraviaraj RMFirst Published Feb 19, 2021, 11:21 AM IST
Highlights

இந்நிலையில் கோபேக் மோடி சர்ச்சைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘’ கருத்துச் சுதந்திரம்’’ என பதிலளித்துள்ளார் ஓவியா. 

திமுக என்றுமே மக்களுக்கான கட்சி என்று பெருமைப்பட்டுக் கொண்டே, அந்த மக்கள் மீது நம்பிக்கை இல்லாமல், ஐபேக் நிறுவனத்தின் வாயிலாக தேர்தலை சந்திக்கவிருப்பது வியப்பு என அரசியல் வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ளது. கொள்கை, லட்சியம், மீது நம்பிக்கை சற்று குறைந்ததால்தானோ என்னவோ இப்படி ஏஜென்சி வைத்து தேர்தலை சந்திக்கிறது திமுக! என்று எதிர்கட்சிகள் குற்றம் சாற்றுகின்றனர்.

என்ன உடை அணிவது, எப்படி கை காட்டுவது, என்ன பேசுவது, கேள்வி யார் கேட்பது, பதில் என்ன சொல்ல வேண்டும், மேடையில் யார் இருக்க வேண்டும், எத்தனை கேமரா வேண்டும், இத்தனையையும் ஒரு ஏஜென்சி சொல்லித்தான் செய்ய வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டதே என மூத்த திமுக உறுப்பினர்கள் முதல், அடிமட்டத் தொண்டர்கள் வரை குமுறி வருவதாகத் தெரிகிறது.

இது இப்படி இருக்க, களவாணி எனும் திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் நுழைந்த, கேரளாவைச் சேர்ந்த நடிகை ஓவியாவை, திமுக தேர்தல் பிரச்சாரத்திற்காக, 1 கோடி சம்பளம் கொடுத்து, ஐபேக் நிறுவனம் பணியமர்த்தி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ் எனும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியில் பிரபலமான இவர், அடுத்தடுத்த படங்கள் சரிவர ஓடாததால், தமிழ் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். என்ன செய்வது, இப்படியே போனால் சரியாக வராதே என, ட்விட்டரில், திமுகவின் தாரக மந்திரமான #GOBackModi ஹேஷ்டேக்கை போட்டுத்தான் பார்ப்போமே என்று முயற்சி செய்து பார்த்தார். போதாதா, “அடிச்சான் பாரு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர்” என வடிவேலு காமெடியில் வருவது போல, திமுகவின் பிரச்சார பீரங்கியாக இப்போது இவரை முன்னிறுத்தியதாம் ஐபேக் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோபேக் மோடி சர்ச்சைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘’ கருத்துச் சுதந்திரம்’’ என பதிலளித்துள்ளார் ஓவியா. 

click me!