மாலத்தீவு , மொரிசியசுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்.. முக்கிய ஆலோசனை நடத்த திட்டம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 19, 2021, 10:57 AM IST
Highlights

அங்கு ஜனாதிபதி இப்ராஹிம் முகம்மது சோலிஹ்  மற்றும் அந்நாட்டின் வெளியுறவு, பாதுகாப்பு,  நிதி, பொருளாதாரம் மற்றும் மேம்பாடு மற்றும் திட்டமிடல் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளின் அமைச்சருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த வார இறுதியில் மாலத்தீவு மற்றும் மொரிஷியசுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இரு தரப்பு உறவுகள் மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்டவைகள் குறித்து அவர் அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மாலத்தீவு மற்றும் மொரிஷியஸ் ஆகியவை இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய கடல் அண்டை நாடுகள் ஆகும். மேலும் இவ்விரு நாடுகளும் " பிரதமரின் பார்வையில் சாகர்"  என்ற பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன. இவ்விரு நாடுகளுக்கும் இந்தியா கொரோனா தொற்றை சமாளிக்க தொடர்ந்து உதவி செய்து வரும் நிலையில், அது குறித்தும்  விவாதிக்கப்படும் என தெரிகிறது.  

ஆசிய கண்டத்தில் பொருளாதாரத்திலும், பாதுகாப்பிலும் சீனாவுக்கு இணையான நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில் மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளுடனான உறவைப் பேணி காப்பதில் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவு மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா மாலத்தீவுக்கு 250 மில்லியன் டாலர் அவசர நிதி உதவியை வழங்கியது, கிரேட்டர் ஆன் இணைப்பு திட்டத்திற்கு மேலும் 500 மில்லியன் டாலர்களை இந்தியா அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு ஜனாதிபதி இப்ராஹிம் முகம்மது சோலிஹ்  மற்றும் அந்நாட்டின் வெளியுறவு, பாதுகாப்பு,  நிதி, பொருளாதாரம் மற்றும் மேம்பாடு மற்றும் திட்டமிடல் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளின் அமைச்சருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

மற்றும் இருதரப்பு உறவையும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது, கோவிட்டுக்கு பிந்தைய பொருளாதார மீட்சிக்கு மாலத்தீவுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்வது உள்ளிட்ட பல்வேறு வெளிவிவகார விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி  22,23 ஆகிய தேதிகளில் ஜெய்சங்கர் மொரிஷியசுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு அந்நாட்டின் ஜனாதிபதி பிரித்திவிராஜ் ரூபன் மற்றும் பிரதமர் பிரவீன் ஜெகநாத் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

அப்போது வெளியுறவு அமைச்சர் ஆலன் கானுடனும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அந்நாட்டில் இந்தியா மேற்கொண்டு வரும் உட்கட்டமைப்பு திட்டங்களையும் மற்றும் அவற்றை தொடர்ந்து செயல்படுத்துதல், கொரோனா வைரசுக்கு எதிராக அந்நாட்டிற்கு இந்தியா செய்து வரும் உதவிகள் மற்றும் இருதரப்பு பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர் அங்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மொரிசியசுக்கு கடந்த மாதம் இந்தியா1 லட்சம் மேட் இன் இந்தியா தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது," தடுப்பூசி மைத்திரி " திட்டத்தால் பயன் அடைந்த 4 இந்தியப்பெருங்கடல் நாடுகளில்  மொரிஷியசும் ஒன்றாகும், 

மாலத்தீவு மற்றும் மொரிஷியஸ் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கிய கடல் அண்டை நாடுகள் என்பதால், சாகர் திட்டம் அதாவது, பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற பிரதமர் மோடியின் இத்திட்டத்தில் மாலத்தீவு  தனிச்சிறப்பு பெற்றுள்ளது. அதே நேரத்தில் மொரிசியசுடன் உறவை வலுப்படுத்துதல் இரு நாட்டு மக்கள் உடனான உறவை அதிகரிக்கும் முயற்சியின் சான்றாக ஜெய்சங்கர் இந்த பயணம் அமையும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இலங்கைக்கு அமைச்சர் ஜெய்சங்கர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார், இந்நிலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களாதேஷ்  பயணத்திற்கான முன்னேற்பாடாக மார்ச் 4-ஆம் தேதி பங்களாதேஷ் பயணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!