ஒரே ஒரு அச்சகர் கூட பணி இழக்கல.. தேவையில்லாமல் வதந்தி பரப்பினால் ஆப்பு.. அமைச்சர் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Aug 17, 2021, 11:04 AM IST
Highlights

ஆகமவிதிகளின் படியே இரண்டாம் நிலை அர்ச்சகர்கள் பணியமர்த்தப்படுவதாகவும், இதனால் முந்தைய அர்ச்சகர்களை அரசு வெளியேற்றுவது போலவும், அவர்கள் பணியை இழந்திருக்கின்றனர் என்பது போலவும் தகவல்கள் பரப்பப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறை பற்றி, சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு இதனை தெரிவித்தார். 

ஆகமவிதிகளின் படியே இரண்டாம் நிலை அர்ச்சகர்கள் பணியமர்த்தப்படுவதாகவும், இதனால் முந்தைய அர்ச்சகர்களை அரசு வெளியேற்றுவது போலவும், அவர்கள் பணியை இழந்திருக்கின்றனர் என்பது போலவும் தகவல்கள் பரப்பப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

அரசை பொறுத்தவரை கோயில்களில் இருந்து யாரையில் வெளியேற்றும் எண்ணம் இல்லை என்றும், ஏதேனும் அர்ச்சகர் பணியை இழந்திருந்தால் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அர்ச்சகர் நியமனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சமூகவலைதளங்களில் போலியான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

5 ஆண்டுகள் பணிபுரிவோரை பணி நிரந்தரம் செய்யும் பணியை அரசு மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் பேசிய சேகர்பாபு, பரம்பரை அறங்காவலர்கள் என்று கோயில்கள், அதை சுற்றி உள்ள இடங்களை தவறாக பயன்படுத்துபவர்களை நீக்கிவிட்டு இணை ஆணையரை நியமிக்க உள்ளதாகவும் பேசினார்.

click me!