பாஜக என்ற அந்த ஒரு கட்சிதான் எதிர்க்கிறது.. தமிழக மக்களுக்கு விரோதமானது.. காய்ச்சி எடுத்த கனிமொழி.

Published : Jan 08, 2022, 01:49 PM IST
பாஜக என்ற அந்த ஒரு கட்சிதான் எதிர்க்கிறது.. தமிழக மக்களுக்கு விரோதமானது.. காய்ச்சி எடுத்த கனிமொழி.

சுருக்கம்

பலமுறை முதலமைச்சர் சட்டமன்றத்திலும் இந்த நீட் தேர்வுக்கு எதிராகப் பேசியிருக்கிறார் தொடர்ந்து பல மாநில உள்ள முதலமைச்சர் களையும் சந்தித்து, அவர்களிடம் இந்த கோரிக்கை விளக்கமாக சொல்லி இருக்கிறோம். 

பா.ஜ.க‌ தவிர‌ தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகத்தான் இருக்கின்றனர் எனவும், தொடர்ந்து தமிழக மக்கள் எதிர்க்கக்கூடிய இந்த திட்டத்தை பாஜக ஆதரிப்பது என்பது தமிழக மக்களுக்கு விரோதமானது என திமுக மகளிரணி செயலாளர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம், அந்தோனி திருமண மண்டபத்தில் நடைபெற்ற, நபார்டு KFW SOIL PROJECT தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் நீர்ப்பிடிப்பு திட்டம் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேருரை ஆற்றினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. இந்த நிகழ்வில், தலைமை  உரையாற்றினார்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ். இந்த நிகழ்வுக்கு, பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் கனிமொழி எம்.பி திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள், அரசியல் இயக்கங்கள் அத்தனை பேரும் நீட் தேர்வுகள் தமிழகத்திற்குத் தேவை இல்லை, அது நமது சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது. நம்முடைய மாணவர்கள் மிகப்பெரிய அளவிலே இந்த நீட் தேர்வினால் பாதிக்கப்படுகிறார்கள், அதனால் அதை நாங்கள் எதிர்க்கிறோம். நீட் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் நம்முடைய தெளிவான கோரிக்கையாக இருக்கிறது.

பலமுறை முதலமைச்சர் சட்டமன்றத்திலும் இந்த நீட் தேர்வுக்கு எதிராகப் பேசியிருக்கிறார் தொடர்ந்து பல மாநில உள்ள முதலமைச்சர் களையும் சந்தித்து, அவர்களிடம் இந்த கோரிக்கை விளக்கமாக சொல்லி இருக்கிறோம். எங்களுடைய பாராளுமன்ற திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தலைமையிலே குடியரசுத் தலைவர், அமைச்சர்களையும் சந்தித்து,  நீட் தேர்வுகளிலிருந்து விலக்கு என்கின்ற கோரிக்கைகளை வைத்து இருக்கின்றோம். தொடர்ந்து தமிழக மக்கள் எதிர்க்கக்கூடிய இந்த திட்டத்தை பாஜக ஆதரிப்பது என்பது தமிழக மக்களுக்கு விரோதமானது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!
Vijay's Gold Scheme: கல்யாணத்துக்கு 8 கிராம் தங்கம், குழந்தை பிறந்தா மோதிரம்! எப்போ கிடைக்கும் தெரியுமா?