"நான் முதல்வர் ஸ்டாலினுக்கு விரோதமானவன் அல்ல" எச்.ராஜா அந்தர் பல்டி.

By Ezhilarasan BabuFirst Published Jan 8, 2022, 12:55 PM IST
Highlights

தமிழகத்தில் ஜெயங்கொண்டத்தில் இருக்கும் கோவிலை இடித்தது உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் நிதியை சூரையாடும் நோக்கோடுதான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

தமிழகத்தில், இந்து கோவில்களை முழுமையாக சட்டவிரோதமாக அழித்துவிடும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் இந்து கோவில்களில் அறங்காவலர்கள் குழு தேர்வு மற்றும் இந்து கோவில்களை மேம்படுத்துதல், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் உண்மையை அறிவிக்க கோரி இந்து கோவில்கள் மீட்பு இயக்கத்தின் சார்பில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,கோவிலில் உள்ள  தங்கத்தை டிரஸ்டி இல்லாமல் உருக்க முடியாது, அறங்காவலர் இல்லாமல் எந்த செயலும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது.

எந்த கோவிலும் பணத்துடன் இருந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.அறநிலையத்துறை அமைச்சர்,ஆணையர் ஆகியோர் அறங்காவலர் நியமனம் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கையில் உண்மைத் தன்மை இல்லை. இந்துகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற தீர்ப்பின் படி, பாரம்பரிய கோவில்களில் அறங்காவலருக்கு தான் முன்னுரிமை, எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்க கூடாது. 

அரசியல் பின்னனியில் இருப்பவர்கள் அறங்காவலர்களாக இருக்க முடியாது என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக சேகரிக்கப்படும் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இந்து சமய அறநிலையத்துறையில் பக்திமானாக இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அதற்கு மாறாக கோவில்களில் இருக்கும் நிதியை சுரண்டும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது.தமிழகத்தில் உள்ள 6,414 கோவில்களில் 1,415 கோவில்களை இந்து சமய அறநிலையத்துறையினர் அழிந்துள்ளனர். தமிழகத்தில் ஜெயங்கொண்டத்தில் இருக்கும் கோவிலை இடித்தது உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் நிதியை சூரையாடும் நோக்கோடுதான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

கோவில்கள் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக மக்களை ஒன்றிணைத்து தான் போராடா வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்தார். நான் முதல்வர் ஸ்டாலினுக்கு விரோதமானவன் அல்ல ஆனால்  அவருடைய தலைமையில் செயல்பட்டு வரும் இந்துக்களுக்கு எதிராக செயபட்டு வரும் அரசிற்கு எதிராக தான் குரல் கொடுத்து வருகிறேன் என்றார். கிறிஸ்துவ மிசினரின் கைக்கூலியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களை நிர்ணயிக்க அரசிற்கு திறமையில்லை என தெரிவித்தார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நோயால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்து கோவில்கள் இந்துக்களிடமே வழங்கப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.  
 

click me!