இந்த இடத்தில் இடி மழையுடன் சூறாவளி சும்மா சுற்றி சுற்றி அடிக்க போகுதாம்.. வானிலை மையம் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jan 8, 2022, 1:24 PM IST
Highlights

11.01.2022, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழகத்தில் இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மழை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும், வரும் 12 ஆம் தேதி வரை தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை பின்வருமாறு :- 

08.01.2022, 09.01.2022: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 10.01.2022: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 11.01.2022, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

என சென்னை வானிலை ஆய்வு மேயம் எச்சரித்துள்ளது. 12.01.2022: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30  குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பிலவாக்கல் அணை (விருதுநகர்) 6, கோத்தகிரி (நீலகிரி, ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), மஞ்சளாறு (தேனி), ராஜபாளையம் (விருதுநகர்)  தலா1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 08.01.2022: தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 09.01.2022: இலங்கைக்கு தென் கிழக்கே தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 35  முதல் 45  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

click me!