ஒரே ஒரு எலுமிச்சம்பழம் கொண்டு வந்தால் போதும்... ராமதாஸ் அன்புக்கட்டளை..!

Published : Nov 09, 2019, 05:21 PM IST
ஒரே ஒரு எலுமிச்சம்பழம் கொண்டு வந்தால் போதும்... ராமதாஸ் அன்புக்கட்டளை..!

சுருக்கம்

தன்னைப்பார்க்க வருபவர்கள் எந்த அன்பளிப்பையும் கொண்டு வரவேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அன்பு கட்டளை போட்டுள்ளார்.   

இதுகுறித்து அவர், தனது முகநூல் பக்கத்தில், ’’மருத்துவர் அய்யாவை சந்திக்க வருவோர்  பூங்கொத்து, பொன்னாடையை தவிர்க்கவும். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை சந்திக்க வருபவர்கள் பொன்னாடைகள், பூங்கொத்துகள், பழங்கள் ஆகியவற்றை வழங்குவதை தவிர்க்கும்படி தலைமை நிலையம் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மருத்துவர் அய்யா அவர்களுக்கு, அன்பின் மிகுதியால் ஏதேனும் பரிசுப் பொருள் அளித்தே தீர வேண்டும் என்று நினைப்பவர்கள், மிகவும் எளிமையாக ஒரே ஒரு எலுமிச்சை பழம் வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதுவும் கூட வாய்ப்பு இருந்தால் மட்டுமே, அதற்காக அலைய வேண்டாம்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!