பரோலில் வந்து செம்ம ரகசியமாக பத்திரப்பதிவு செய்த சசிகலா?!: ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் சொத்துக்கள் அமுக்கப்பட்ட கதை

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2019, 5:13 PM IST
Highlights

“ நான்காண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்ற சசிகலா அந்த ஆண்டு அக்டோபரில் பரோலில் வந்தார். சென்னையில் தி.நகர் வீட்டில் தங்கியிருந்த அவர், அங்கிருந்த படியே முப்பதுக்கு மேற்பட்ட சொத்துக்களை பத்திரப்பதிவு செய்தார். அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பெரம்பூர் மால், பேப்பர் மில், ஜூவல்லர்ஸ், புதுச்சேரியில் ரிசார்ட் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களை வாங்கியதை கண்டறிந்தோம். 

பாபர் மசூதி இட விவகார தீர்ப்பு தாறுமாறாக எதிர்பார்க்கப்பட்டு, இதோ தடாலடியாக வந்து சேர்ந்துவிட்டது. ’இது இந்து தேசம்’ என்று இந்துக்களும், ‘இது இந்துத்வ தேசம்’ என்று சிறுபான்மையினரும் இந்த தீர்ப்பு பற்றிக் கருத்து சொல்லிக் கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அடுத்து ஒரு சென்சேஷனல் தீர்ப்பு பற்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அது, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலா தண்டனை முடியும் முன்னரே விடுதலையாவாரா? அல்லது தண்டனை முடிந்த பின்னும் வேறொரு வழக்கில் கைதாவாரா? என்பதுதான். நான்காண்டு சிறைதண்டனை முடியும் முன்னரே சசி ரிலீஸ் ஆவாரா? எனும் கேள்விக்கு ‘வாய்ப்பே இல்லை ராசா’ எனும் ரீதியில் பதில்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

ஆனால் அதேவேளையில் ‘சசி மீண்டும் கைதா?’ எனும் தகவலுக்கு மறுப்பு ஏதும் முழுமையாக வரவில்லை. அதற்கு வாய்ப்பு உள்ளது போலவே சூழல்கள் சொல்கின்றன. ஏன் சசி மீண்டும் கைது? எனும் கேள்விக்கு வந்து விழும் தகவல்களில் மிக முக்கியமாக சமீபத்தில் சசிகலா டீமுக்கு சொந்தமான ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் சொத்துக்களை இன்கம் டாக்ஸ் துறை முடக்கிவைத்ததும், அந்த சொத்துக்கள் சசி டீமுக்கு வந்து சேர்ந்த வழிவாய்க்கால்களை விசாரித்ததன் முடிவில் எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கையே இந்த கைது! என்கிறார்கள். இது பற்றி ஒரு ஷாக் தகவலை சொல்லும் வருமான வரித்துறையின் சில அதிகாரிகள் “ நான்காண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்ற சசிகலா அந்த ஆண்டு அக்டோபரில் பரோலில் வந்தார். சென்னையில் தி.நகர் வீட்டில் தங்கியிருந்த அவர், அங்கிருந்த படியே முப்பதுக்கு மேற்பட்ட சொத்துக்களை பத்திரப்பதிவு செய்தார். அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பெரம்பூர் மால், பேப்பர் மில், ஜூவல்லர்ஸ், புதுச்சேரியில் ரிசார்ட் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களை வாங்கியதை கண்டறிந்தோம். 

அவர் அப்போது செய்த மூவ்களை இப்போது ஆவண ரீதியில், சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளோம். சசி மற்றும் இளவரசி மீது பினாமி சொத்துக்கள் தடுப்பு பரிவர்த்தனை சட்டப்படி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்கிறார்கள். என்ன கொடுமைடா சாமீ! முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் உள்ளே போன சசி, பரோலில் வந்து  பதுங்கியபடியே மறுபடியும் சொத்துக் குவிக்கிற வேலையை பார்த்திருக்குதுன்னா....எப்படிப்பட்ட டீம் இதெல்லாம்! என்பதே மக்களின் அதிர்ச்சி. 
 

click me!