பட்ஜெட்டில் பெண்களுக்கு பிடிச்ச ஒரே ஒரு அறிவிப்பு இதுதான்...!

First Published Feb 1, 2018, 3:42 PM IST
Highlights
only one announcement important for women by budget


பெண்களின் துயர் துடைக்க இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம் 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று 2018-19 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்து உரையாற்றினார். 

அப்போது, நாங்கள் பதவியேற்கும் போது நாடு ஊழலில் மூழ்கி கிடந்தது எனவும் தற்போது உலகில் வேகமாக வளரும் நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம் எனவும் தெரிவித்தார். 

பணமதிப்பு நீக்கம் மூலம் கருப்பு பணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும்  அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் வலிமை பெற்றுள்ளது எனவும் ஜி.எஸ்.டி.யால் மறைமுக வரி அமைப்பு எளிதாகியுள்ளது எனவும் குறிப்பிட்டார். 

மேலும் பெண்களின் துயர் துடைக்க இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம் 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி  அறிவித்தார். 

மத்திய பட்ஜெட்டில் இது ஒரு அறிவிப்பு மட்டும் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் ஏழைக் குடும்பத்தினருக்கு சுகாதாரமான சமையல் எரிவாயு அடுப்புகள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கு முன்னர் 5 கோடி குடும்பத்தினருக்கு மட்டுமே இலவச கேஸ் இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டமன்ற தேர்தல்கள் வரஉள்ள நிலையில் தற்போது பெண்களின் ஓட்டுக்களை கவர்வதற்கு ஏதுவாக இத்தகைய அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

click me!