1 மணி நேரம் மட்டுமே அவகாசம்.....எம்எல்ஏக்களை கைது செய்து அழைத்து செல்ல வாகனங்கள் தயார்...

 
Published : Feb 15, 2017, 03:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
1 மணி நேரம் மட்டுமே அவகாசம்.....எம்எல்ஏக்களை கைது செய்து அழைத்து செல்ல வாகனங்கள் தயார்...

சுருக்கம்

கூவத்தூர்

தற்போது   கூவத்தூரில்  உள்ள  எம்எல்ஏக்கள்  உடனடியாக அதாவது , மூன்று மணிக்குள் வெளியேற வேண்டும் என  காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்  சில எம் எல் ஏக்கள்  மற்றும் சசிகலா  ஆதரவாளர்கள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வன்முறை தடுப்பு போலீசார்  குவிப்பு :

கூவத்தூரில், தற்போது அசாதாரண சூழல்  நிலவுவதால், கூவத்தூர் விடுதியை சுற்றி 3000 போலீசார் மற்றும் அதிரடி படையினர்  குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்,  கூவத்தூர்  பகுதியில் உச்சகட்ட பதட்டம் நிலவி வருகிறது .

ஒரு மணி நேரம் அவகாசம்

சரியாக 3  மணிக்குள்  அனைத்து எம் எல் ஏக்களும்  வெளியேற வேண்டும் என காவல்துறை எச்சரித்தும்  அவர்கள்  இன்னும்  வெளியேறவில்லை.  இதனிடையே, ரிசார்ட்டில்  இருந்து வெளியேற   ஒருமணி நேரம் கால அவகாசம்  கேட்டுள்ளதாக  தெரிகிறது. அதனடிப்படையில்,  தற்போது   எம் எல் ஏக்கள் , தாங்கள்   தங்கியிருந்த   அறையில் இருந்து வெளியேறி ,  ரிசார்ட் வளாகத்தில் குவிந்துள்ளனர்.

வாகனங்கள்  தயார் :

ஒரு வேளை வெளியேறாவிட்டால் , எம்எல்ஏக்களை  கைது செய்து  அழைத்து செல்ல  வாகனங்கள்  தயார் நிலையில்  நிறுத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!