பட்டி, தொட்டி எல்லாம் சி.வி.சண்முகத்தின் புகழ்.. சாதனை அமைச்சர்கள் பட்டியலில் தூளாக இடம் பிடித்து அசத்தல்.!

By vinoth kumarFirst Published Apr 28, 2020, 1:23 PM IST
Highlights

தமிழக சட்டக் கல்வித் துறையில் ஏற்பட்ட இந்த மாபெரும் முன்னேற்றத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நேரடி செயல்பாடுகளே காரணம் என மாணவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

தமிழக சட்டக் கல்வித் துறையில் ஏற்பட்ட இந்த மாபெரும் முன்னேற்றத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நேரடி செயல்பாடுகளே காரணம் என மாணவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

தமிழ்நாடு கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட போது, தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள் தமிழக சட்டக் கல்லூரிகளில் ஆன்லைன் படிப்புகள் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சட்டக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து சட்டத்துறை செயலாளர் கோபி ரவி குமார் அவர்கள் ஆலோசனையின் பேரில் அனைத்துச் சட்டக்கல்லூரி முதல்வர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டு அதில் கூகுள் கிளாஸ் ரூம், ஸ்கைப், யூ டியூப், எட் மோட், ஸும், வாட்ஸ் ஆப் ஆகிய செயலிகள் மூலமாக இக்கல்வி ஆண்டிற்கான மீதமுள்ள பாடத்திட்டங்களை கற்பிக்க ஆணையிடப்பட்டது.

கடந்த மார்ச் 26 முதல் படிப்படியாக தமிழகத்தில் உள்ள 14 அரசு சட்டக் கல்லூரிகளிலும் இவ் ஆன் லைன் வகுப்புகள் துவங்கப்பட்டது.  இன்று பட்டி, தொட்டி எல்லாம் மக்கள் மொபைல் டேட்டா பயன் படுத்துவதால், கிராமத்து மாணவர்கள் கூட மிகவும் விருப்பத்துடன் காலை முதல் மாலை வரை பல பாடங்களையும், சட்டத்தில் ஏற்படும் உலக மாற்றங்களையும் தேசிய சட்டப் பள்ளிகளுக்கு இணையாக சிறப்புடன் படித்து வருகிறார்கள்.  

தமிழ் மொழி செயலி இருப்பதால் தமிழ் மொழியில் கற்பவர்களுக்கும் இது வசதியாக உள்ளது என மாணவர்கள் தெரிவிக்கிறார்கள். புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது 50 சதவீதம் ஆன்லைன் படிப்பு நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்குனர் முனைவர் சந்தோஷ் குமார் தெரிவிக்கிறார். தமிழக சட்டக் கல்வித் துறையில் ஏற்பட்ட இந்த மாபெரும் முன்னேற்றத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சரின் நேரடி செயல்பாடுகளே காரணம் எனக் கூறி அனைவரும் நன்றியுடன் சட்ட அமைச்சர் சி. வி.சண்முகம் அவர்களை பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

click me!