கிட்டே வந்தால் கட்டிப்பிடிப்பேன்... சென்னையை கலங்கடிக்கும் கொரோனா நோயாளி..!

Published : Apr 28, 2020, 12:34 PM IST
கிட்டே வந்தால் கட்டிப்பிடிப்பேன்... சென்னையை கலங்கடிக்கும் கொரோனா நோயாளி..!

சுருக்கம்

தன்னை யாராவது நெருங்கி வந்தால் கட்டிப்பிடித்து விடுவேன் என கொரோனா தொற்றுக்குள்ளானவர் மிரட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தன்னை யாராவது நெருங்கி வந்தால் கட்டிப்பிடித்து விடுவேன் என கொரோனா தொற்றுக்குள்ளானவர் மிரட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் நான்கில் மூன்று ம்டங்கு கொரோனா தொற்று  சென்னையில் பாதித்து வருகிறது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் இந்த நோயின் சீற்றம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தப்பியோடி ஓடியுள்ளார். 

வடசென்னை, புளியம்தோப்பு பகுதியை சேர்ந்த 45 வயதான நபருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பதை கண்டறியப்பட்ட நிலையில், அவர் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அந்த நபர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து அவரது வீட்டுக்கு சென்ற போலீசார், அவரை மருத்துவமனை அழைத்துச்செல்ல முயன்றனர். அப்போது நீண்ட நேரம் போராடியும் அந்த நபர் மருத்துவமனை வர மறுத்ததால் போலீசார் அங்கிருந்து சென்றனர்.  அப்போது தன்னை யாராவது நெருங்கி வந்தால் கட்டிப்பிடித்து விடுவேன் என கொரோனா தொற்றுக்குள்ளானவர் மிரட்டியுள்ளார். 

இன்று காலை மேலும் ஒரு மருத்துவக் குழுவினர் அந்த நபரை அழைத்துவர அவரது வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். அவர் தொடர்ந்து முரண்டு பிடித்து வருவதால் போலீசாரும் மருத்துவ குழுவினரும் திணறி வருகின்றனர். இந்நிலையில் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!