உருக்கமாக பேசிய முதல்வர்.. மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா..!

By vinoth kumarFirst Published Mar 23, 2023, 1:12 PM IST
Highlights

ஆன்லைன் சூதாட்டத்தால் இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு; இன்னும் தாமதப்படுத்தினால் சட்டமன்றத்தையும், மாநில மக்களையும் ஆளுநர் அவமதிப்பதாகவே எடுத்துக்கொள்ள முடியும். மனித உயிர்களை பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து ஏராளமானவோர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியில் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

ஆனால் இந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2  முறை தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதை பல மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ம் தேதி சட்ட மசோதாவை அரசுக்கு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற தமிழக அமைச்சரவை முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இன்று தாக்கல் செய்து பேச தொடங்கினார். அப்போது, மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்களை காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு உரிமை உண்டு. 

ஆன்லைன் சூதாட்டத்தால் இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு; இன்னும் தாமதப்படுத்தினால் சட்டமன்றத்தையும், மாநில மக்களையும் ஆளுநர் அவமதிப்பதாகவே எடுத்துக்கொள்ள முடியும். மனித உயிர்களை பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. எந்த சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும் தான் மாநில மக்களை காப்பது ஒன்றே சட்டத்தின் கடையாகும்.  

மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு எங்களால் செயல்படமுடியாது. இதை பிரகடனமாக சொல்கிறேன். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை உறுப்பினர்கள் நிறைவேற்றி தரவேண்டும். மசோதாவை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் என முதல்வர் கூறினார். மசோதா மீது ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏக்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசினார்கள். இதனையடுத்து, ஆன்லைன் தடை சட்ட மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

click me!