BREAKING: பிரதமர் மோடி குறித்து அவதூறு.. ராகுல் காந்தி குற்றவாளி.. 2 ஆண்டுகள் சிறை தண்டனை..!

By vinoth kumarFirst Published Mar 23, 2023, 11:24 AM IST
Highlights

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது திருடர்கள் அனைவரின் பெயருக்குப் பின்னால் மோடி எனும் பெயர் இருக்கிறது. அது நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என யாராக இருக்கட்டும்.  இன்னும் எத்தனை மோடி வெளியே வரப்போகிறார்களா நமக்குத் தெரியாது என பேசியிருந்தார். இவரது பேச்சு சமூகவளைதலங்களில் வைரலானது. 

இதற்கு எதிராக குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த மனுவில்;- 2019 ஆம் ஆண்டு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கோலாரில் ராகுல் காந்தி உரையாற்றியபோது, ''எல்லா திருடர்களுக்கும் மோடி என்று பொதுவான குடும்பப் பெயர் எப்படி வந்தது?'' என்று கூறி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவதூறு செய்து இருந்தார் என்று குற்றம் சாட்டினார். 

இதுதொடர்பாக வழக்கு சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி எச்எச் வர்மா ராகுல் காந்தி குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பு  வழங்கினார். 
 

தற்போது தண்டனை விவரமும் வெளியாகியுள்ளது. அதில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!