அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார்.! எடப்பாடிக்கு மீண்டும் சவால் விடுத்த ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Mar 23, 2023, 10:46 AM IST
Highlights

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ளநிலையில், பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் என ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி காரணமாக ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சியின் விதிகளை மீறியதாக கூறி ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து ஓபிஎஸ்  தரப்பு நீதிமன்றங்களில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. இநிதநிலையில் அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு 10 மாவட்ட செயலாளர்கள்முன் மொழிய வேண்டும் என்றும் 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும் என விதிகள் புதிதாக உருவாக்கப்பட்டிருந்தது.

தேர்தல் விதிகளில் மாற்றம்

இந்தநிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்தது. இதனால் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தலாம் ஆனால் முடிவு அறிவிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பா=ன வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற போது, பொதுச்செயலாளர் பதவிக்காக ஈபிஎஸ்-க்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாத வகையில் நிபந்தனைகளை விதித்து விதிகளை திருத்தியுள்ளனர். நிபந்தனைகளை நீக்கினால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

போட்டியிட தயார்

ஓபிஎஸ்யின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தவர். அந்த கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அதில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என தெரிவித்துள்ளவர், அதிமுகவின் புதிய விதிகள் செல்லாது என்றும், எம்ஜிஆர் வகுத்த விதிகள் தான் செல்லும் என கூறினார்.

இதையும் படியுங்கள்

நான் ரெடி.!! சவாலுக்கு எடப்பாடி தயாரா.? கோர்ட்டில் ஓபிஎஸ் போட்ட கண்டிஷன் - மறுபடியும் முதல்ல இருந்தா

click me!