கூட்டணி கட்சியை வளர்க்க நினைப்பவர்கள் முட்டாள்கள்..! டெல்லி செல்லும் முன் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

By Ajmal KhanFirst Published Mar 23, 2023, 12:55 PM IST
Highlights

பாஜக வளர்க்கனம்னு நினைக்க மாட்டாங்க.  நானும் இங்கிருந்து கொண்டு கூட்டணி கட்சி வளர்க்கனும் நினைக்க மாட்னே்.  இங்கிருந்து இன்னொரு கட்சியை வளர்க்கனும் நினைத்தால் நான் முட்டாள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாமல் தனித்து போட்டியிட்டால் தான் பாஜக வளரும் எனவும் கூட்டணி வைத்தால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக தேசிய பாஜக தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார். இந்தநிலையில் இன்று விமானம் மூலம் அண்ணாமலை டெல்லி சென்றார். முன்னாதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென குறிப்பிட்டார்.  பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்கள் மீது நடவடிக்கை இல்லையெனவும் சமூக வலைதளத்தில் மீம்ஸ் போட்டால் கைது செய்யும் நிலைதான் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்ணாமலையின் சொத்து என்ன.?

சமூக வலைதளத்தில் வரும் கருத்து முதலமைச்சர் ஸ்டாலினை முள்ளு போல் குத்துவதாக கூறினார். தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுகிறது, கொலை கொள்ளை அதிகரித்துள்ளது. ஆனால் இதனை கவனத்தில் கொள்ளாமல் சமூக வலை தளத்தின் மீது காவல் துறை கண்ணாக இருப்பதாக தெரிவித்தார். அரவங்குறிச்சி தேர்தலில் அண்ணாமலை பல கோடி ரூபாய் செலவு செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தவர், அவர்கள் கையில் அரசு உள்ளது, அதிகாரம் இருப்பதாக தெரிவித்தார். உங்கள் முழு அரசு அதிகாரத்தையும் ஏவி விட்டு அண்ணாமலை எவ்வளவு சம்பாதித்தார். கர்நாடகாவில் என்ன சொத்து வாங்கியுள்ளார். எங்கு முறைகேடு செய்துள்ளார் என தமிழக காவல்துறையை அனுப்பி தேடி பிடித்து கொண்டு வரட்டும் என கூறினார்.

கூட்டணி கட்சியை வளர்க்க மாட்டார்கள்

அப்போது அதற்கு பதில் அளிப்பதாக தெரிவித்தார்.  இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை அனுப்புங்கள். பத்திர பதிவு அலுவலகத்தில் ஆய்வு நடத்துங்கள் அண்ணாமலை சொத்து வாங்கி இருக்கானா..? அவரது ரத்த சொந்தங்கள் சொத்து வாங்கிருக்கார்களா என ஆய்வு நடத்துங்கள் என கூறினார். கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களை விமர்சிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக வளர்ச்சியை அவர்கள் ரசிக்கவில்லை நல்லது தான். யாரும் அவர்கள் கட்சியை வளர்க்க நினைப்பார்கள். கூட்டணி கட்சியை வளர்க்க நினைக்க மாட்டாங்க,  பாஜக வளர்க்கனம்னு நினைக்க மாட்டாங்க. நானும் இங்கிருந்து கொண்டு கூட்டணி கட்சி வளர்க்கனும் நினைக்க மாட்னே்.  

யாருடன் பாஜக கூட்டணி.?

இங்கிருந்து இன்னொரு கட்சியை வளர்க்கனும் நினைத்தால் நான் முட்டாள். அரசியல் பொறுத்தவரை யாரும் நண்பர்கள் இல்லை இதை எப்பொழுது புரிந்து கொள்கிறீங்களோ அப்போது தான் பாஜக வளர்ச்சி அடையும்.அரசியலில் யாரும் நிரந்திர நண்பர்கள் இல்லை, அதே போல எதிரியும் இல்லை. அவர்கள் தங்கள் கட்சியை வளர்க்க நினைக்கிறார்கள். கூட்டணி தலைவர்கள் விமர்சம் வரவேற்கிறேன்.  எங்களால் அவர்கள் கட்சி வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கவலை்படுகிறார்கள் என தெரிவித்தார். கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்  நேரமும் காலமும் வரும் அப்பொழுது சொல்கிறேன். இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது என கூறினார். 

இதையும் படியுங்கள்

கிருஷ்ணகிரி கொலை சம்பவத்தில் கொலையாளி யார்.? சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் புகாருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு
 

click me!